கூர்க்கா

கூர்க்கா (Gurkha) என்பது நேபாளத்தில் உள்ள ஒருவகை மக்களைக் குறிக்கும் சொல். இந்து சமயச் சித்தரான கோரக்நாத் என்ற வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் இமயமலையின் ஒரு பகுதியான கூர்க் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஆதலால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் அமைக்கப்பட்ட ராணுவப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கூர்க்காக்கள், அதன்பின் வந்த பிரிட்டிஷ் ராஜியத்திலும் படைபிரிவில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் பிரிட்டிஷ் ராணுவத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிரித்தானிய அரசக் குடும்பத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டனர். கூர்க்கா இன மக்கள் இன்று இந்திய ராணுவத்திலும், பிரித்தானிய ராணுவத்திலும், சிங்கப்பூரின் உள்ளூர்க் காவல் படைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். கூர்க்காக்கள் பொதுவாக குக்குரி என்னும் நீளமான வளைந்த கத்தியை எப்பொழுதும் தங்களுடனே வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். தமிழகத்தின் சில இடங்களில் இரவுநேரக் காவல் பணியிலும் ஈடுபட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டிப் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

லண்டனில் உள்ள கூர்க்கா நினைவுச் சின்னம்
சிங்கப்பூரில் போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு கூர்க்கா வீரர்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.