கூபாவின் பொதுவுடைமைக் கட்சி

கூபாவின் பொதுவுடைமைக் கட்சி அல்லது கியூபாவின் கம்யூனிஸ்டுக் கட்சி (Communist Party of Cuba, (எசுப்பானியம்: Partido Comunista de Cuba, PCC) கூபாவின் ஆளும் அரசியல் கட்சியாகும். இது மார்க்சிய-லெனினியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவுடைமைக் கட்சியாகும். கூபாவின் அரசியலமைப்பு பொதுவுடைமைக் கட்சியை "சமூகத்தினதும் அரசினதும் தலைமைப் படை" என்று வரையறுக்கிறது.

கூபாவின் பொதுவுடைமைக் கட்சி
Communist Party of Cuba
முதலாவது செயலாளர்ராவுல் காஸ்ட்ரோ
இரண்டாவது செயலாளர்ஒசே ரமோன் மக்காடோ
தொடக்கம்3 அக்டோபர் 1965
தலைமையகம்அவானா, கூபா
செய்தி ஏடுகிரான்மா
இளைஞர் அமைப்புஇளம் பொதுவுடைமை அணி
உறுப்பினர்  (2011)800,000 14%
கொள்கைபொதுவுடைமை,
மார்க்சியம்-லெனினியம்,
இடதுசாரி தேசியம்,
காஸ்ட்ரோயிசம்,
குவேரிசம்
அரசியல் நிலைப்பாடுதூர-இடதுசாரி அரசியல்
நிறங்கள்சிவப்பு, நீலம்
இணையதளம்
http://www.pcc.cu/

பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற பிடல் காஸ்ட்ரோ கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். 2011 ஏப்ரல் முதல் பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ அரசுத்தலைவராகவும், கட்சியின் முதல் செயலாளராகவும் பதவியில் உள்ளார்.[1]

மேற்கோள்கள்

  1. Raul Castro to lead Cuba's Communist Party by Shasta Darlington, CNN, April 19, 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.