கூத்தனூர்

இந்தியாவில்   தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஊர் கூத்தனூர்  ஆகும். திருவாரூரில் இருந்து 25 கி.மீ தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.கல்வி கடவுளான  சரஸ்வதி கோயில், இங்குதான் உள்ளது.  தமிழ்நாட்டில் கடவுள்   சரஸ்வதிக்கு அமைந்துள்ள ஒரே  கேயில்   கூத்தனூரில் மட்டுமே  உள்ளது.  சரஸ்வதி கடவுள் கல்வித் தெய்வமாகக் கருதப்படுகிறார், எனவே அவா்கள் இந்த தெய்வத்தை வணங்கினால் நல்லறிைவை  பெறலாம் என்று நம்புகிறார்கள். .

கூத்தனூர் வரலாறு

தமிழ் கவிஞரானஒட்டக்கூத்தர்  பிறப்பிடமாக கூத்தனூர் உள்ளது. சோழ மன்னன் ராஜராஜ சோழன் இந்த கிராமத்தை  ஒட்டக்கூத்தரின் கவிதைகளுக்குப் பாிசாக வழங்கினாா். ஏனெனில் அவர் ஒரு பெரிய கவிஞராவார்.  எனவே இந்த கிராமம் கூத்தன் + ஓர் =கூத்தனூர்   என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கூத்தாநூர் முக்கியமான சுற்றுலா தலமாக மாறியது. விஜயதசமி திருவிழா கூதனூரில் கொண்டாடப்படுகிறது, இது இக்கோவிலில் நடை பெறும் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும்.

குறிப்புகள்

  • Tourist Guide to Tamil Nadu. Sura Books. பக். 76. ISBN 81-7478-177-3, ISBN 978-81-7478-177-2.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.