குவைத் தினார்
குவைத்தி தினார் அல்லது குவைத் தினார் (அரபி: دينار, ISO 4217 குறியீடு KWD) என்பது குவைத் நாட்டு நாணயமாகும். ஓரு தினார் என்பது 1000 பில்சுகளாகும். குவைத் தினார் உலகின் அதிக மதிப்புடைய நாணய அலகாக உள்ளது.
குவைத் தினார் | |
---|---|
دينار كويتي (அரபு மொழி) | |
![]() 1994ல் வெளியிடப்பட்ட ஒரு தினார் | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | KWD |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/1000 | பில்சு |
குறியீடு | د.ك or K.D. |
வங்கிப் பணமுறிகள் | ¼, ½, 1, 5, 10, 20 தினார்கள் |
Coins | |
Freq. used | 5, 10, 20, 50, 100 fils |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() |
Issuance | |
நடுவண் வங்கி | குவைத் மத்திய வங்கி |
Website | www.cbk.gov.kw |
Valuation | |
Inflation | 3% |
Source | The World Factbook, 2006 est. |
வரலாறு
கல்ப் ரூபாய்க்கு மாற்றாக 1961 ல் தினார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு பவுண்டு ஸ்டெர்லிங்க்கு இணையான மதிப்பை கொண்டிருந்தது. ஒரு ரூபாய் 1 சில்லிங் 6 பென்சு க்கு இணையாக இருந்தபோது, தினார் மதிப்பு 13⅓ ரூபாய்களாக இருந்தது.
ஈராக் 1990ல் குவைத்தை ஆக்ரமிப்பு செய்தபோது ஈராக்கி தினார் குவைத் தினாருக்கு மாற்றாக இருந்ததுடன், அதிக அளவிலான வங்கித் தாள்கள் ஆக்ரமிப்பு படைகளால் களவாடப்பட்டிருந்தன. ஆக்ரமிப்பு படை தோற்கடிக்கபட்டப் பின் குவைத் தினார் மறுபடியும் நாட்டின் நாணயமாக அறிவிக்கப்பட்டு புதிய வங்கித் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. திருடப்பட்ட பழைய வங்கித் தாள்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
நாணயங்கள்
கீழுள்ள நாணயங்கள் முதலில் 1961ல் அறிமுகப்படுத்தப்பட்டது
- 1 பில்சு (No longer issued)
- 5 பில்சு
- 10 பில்சு
- 20 பில்சு
- 50 பில்சு
- 100 பில்சு