குவாய் சுங்

குவாய் சுங் (Kwai Chung) என்பது ஹொங்கொங்கில், புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில், குவாய் சிங் மாவட்டத்தில் ஒரு நகரமாகும். குவாய் சிங் நகரப் பகுதி கொள்கலன் முனையப் பகுதியாகும். அத்துடன் இது சுன் வான் புதிய நகரம் பகுதியின் ஒரு பிரிவாகும். 2000 ஆம் ஆண்டின் கணிப்பின் படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 287,000 ஆகும். நிலப்பரப்பளவு 9.93 ஆகும்.

குவாய் சுங் நகரப் பகுதி
கவுலூன் வணிக மையம்

கொள்கலன் முனையம்

குவாய் சிங் கொள்கலன் முனையத்தின் காட்சி

ஹொங்கொங்கில் கடல்வழி பொதிகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் கொள்கலன் வணிக மையமாக இந்நகரம் திகழ்கிறது. குவாய் சுங் கொள்கலன் முனையம் உலகில் பாரிய முனையங்களில் ஒன்றும் மிகவும் பணியழுத்தம் மிக்க முனையமும் ஆகும்.

பிரிவுகள்

குவாய் சுங் நகரத்தை நான்கு பிரிவாகப் பிரித்து அழைக்கப்படுகின்றது. அவைகளாவன மேல் குவாய் சுங்(செங் குவாய் சுங்), கீழ் குவாய் சுங் (ஹா குவாய் சுங்), குவாய் சுங் வடக்கு மற்றும் குவாய் சுங் தெற்கு போன்றவைகளாகும்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.