குழு பாலியல் வல்லுறவு
குழு பாலியல் வல்லுறவு (Gang rape) என்பது ஒரு தனிநபர் மீது ஒரு குழு பாலியல் வல்லுறவு கொள்வதாகும். குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் குழுவாக இயங்கி வல்லுறவு கொள்ளுதலை குழு பாலியல் வல்லுறவு என்கின்றனர். இதனை "கூட்டு வல்லுறவு" என்றும் "கூட்டு வன்புணர்வு" என்றும் கூறுவதுண்டு.

இந்தியாவில்
2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு
மருத்துவ மாணவியொருவர் திசம்பர் 16, 2012 [1][2] தில்லியில் ஆறு நபர்களால் பேருந்து ஒன்றில் குழு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பேருந்து உதவியாளர் தவிர்த்து ஐந்து நபர்களுக்கு தண்டனை வழங்கப் பெற்றது.[3][4]
தமிழகத்தில் குழு பாலியல் வல்லுறவு
வாச்சாத்தி
இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தில் 1992 சூன் 20ம் தேதி 18 பெண்களிடம் குழு பாலியல் வல்லுறவு கொண்டதாக வழக்குத் தொடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் 17 வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள்
பாலியல் வன்கொடுமைகளை தடுக்க இந்திய அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளது.[5]
இவற்றையும் காண்க
- பாலியல் வல்லுறவுகளின் வகைகள்
- 2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு
- 2014 உ.பி. குழு வன்புணர்வு