குளோரோகால்சைட்டு

குளோரோகால்சைட்டு (Chlorocalcite) என்பது KCaCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அரிய பொட்டாசியம் கால்சியம் குளோரைடு உப்புப்படர் பாறை வகை கனிமமாகும். செயல்நிலை எரிமலைகளின் நீராவித்துளைகளில் இது காணப்படுகிறது.

குளோரோ கால்சைட்டு
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுKCaCl3
இனங்காணல்
மோலார் நிறை185.54 கி/மோல்
நிறம்வெண்மை சாயல் உள்ள ஊதா
படிக இயல்புபட்டகம் அல்லது அட்டவணை கனசதுரம் போன்ற படிகங்கள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்பு{001} இல் மிகச்சரியாக, {010} சரியாக {100}
மோவின் அளவுகோல் வலிமை2.5-3
ஒளிஊடுருவும் தன்மைஒளி ஊடுறுவும் அல்லது பகுதியாக ஒளி ஊடுறுவும்.
அடர்த்தி2.16 கணக்கிடப்பட்டது
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (–)
ஒளிவிலகல் எண்~1.52
இரட்டை ஒளிவிலகல்வலிமையற்றது
கரைதிறன்நீரில் கரையும்
பிற சிறப்பியல்புகள்ஈரமுறிஞ்சும்
மேற்கோள்கள்[1][2][3][4]

முதன்முதலில் 1872 ஆம் ஆண்டு இத்தாலியிலுள்ள விசுவியசு மலையில் குளோரோகால்சைட்டு கண்டறியப்பட்டது. இக்கனிமத்தில் பொட்டாசியமும் கலந்துள்ளது என்பதைக் கண்டறிவதற்கு முன்னரே கால்சியம் கலந்துள்ளதைக் கண்டறிந்து பெயரிட்டதால் இப்பெயர் பெற்றது. செருமனி நாட்டின் லோவர் சாக்சோனி மாநிலத்தில் இருக்கும் பெயின் நகரில் உள்ள டெசுட்டமோனா சுரங்கத்திலும் குளோரோகால்சைட்டு கனிமம் கிடைக்கிறது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.