குலாலா
தமிழ்நாட்டில் அதிக அளவில் மண்பாண்டத் தொழில் செய்து வரும் குலாலர் சாதியினர் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் குலாலா 20 லட்சம் பேர் வசிக்கின்றனர்.[1]
சமுதாயச் சிறப்புக்கள்
- சாலியவாகனம்சகாப்தம் குலாலர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
- 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் என்பவர் குலாலர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1930களில் இந்த மக்களின் நலத்தை முன்னேற்ற குலாலமித்திரன் என்னும் இதழ் வெளிவந்தது.
அரசியல் பங்களிப்பு
குலாலர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் அரசியலில் முக்கியப் பிரமுகர்களாக சிலர் பங்களிப்பு செய்துள்ளனர்.
- சுப்புராஜ் - முன்னாள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர்
- பெரிய வீரன் - முன்னாள் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக
- B.k.நல்லசாமி-முன்னாள் பவானி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் முதல் M.L.A. பவானி ஈரோடு மாவட்டம்
கேரளா குலாலர்
கேரளாவில், குலாலர் சமூகத்தினர் கும்பாரர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கும்பார மொழி பேசுகின்றனர். கேரளத்தில், நிலாம்பூர் பிரதேசத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு சிறிய இனக்குழுவால் பேசப்படும் மொழியாகும். இவர்கள் எல்லோரும் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் ஆந்திராவிலிருந்து, தமிழகம் வழியாகக் கேரளம் போய்ச் சேர்ந்தவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று கலந்து சேர்ந்த மொழிதான் கும்பார மொழி. இதற்கு வரிவடிவம் கிடையாது என்பதால், கும்பார இனத்தவர்கள் தங்களுக்குப் பழக்கமான மலையாள வரிவடிவத்தைப் பயன்படுத்துகிறார்கள்.[2]