குற்றகலப் பாதை

குற்றகல இருப்புப் பாதை (narrow gauge railroad) என்பது தண்டவாளங்களுக்கு இடையே உள்ள தொலைவு சீர்தர அகலமான 1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) விடக் குறைவான அகலத்தைக் கொண்டுள்ள இருப்புப்பாதை ஆகும். இயக்கத்தில் இருக்கும் பெரும்பான்மையான குற்றகலப் பாதைகள் 2 அடி (610 மிமீ)க்கும் 3 அடி 6 அங் (1,067 மிமீ)க்கும் இடையேயான அகலத்தைக் கொண்டுள்ளன. இந்தியாவில் 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) அகலமுள்ள குற்றகலப் பாதைகள் 9442 கிமீ தொலைவிற்கு உள்ளன. இவை மீட்டர் அகலப் பாதை என அழைக்கப்படுகின்றன. 2 அடி 6 அங் (762 மிமீ) அகலப் பாதைகளும் 2 அடி (610மிமீ) அகலப் பாதைகளும் இயக்கத்தில் உள்ளன. இவையே இந்தியாவில் குற்றகலப் பாதைகள் எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் மலை அல்லது காட்டுப் பகுதிகளில் இயங்குகின்றன. மார்ச்சு 2008 ஆண்டில் 2479 கிமீ தொலைவிற்கு இவ்வகை இருப்புப் பாதைகள் இயக்கத்தில் இருந்தன.

இரண்டடி அகலமுள்ள ஓர் குற்றகலப் பாதை

காட்சிக் கூடம்

குற்றகலப் பாதை தொடர்வண்டிகள்
டார்ஜிலிங் இமாலய தொடர்வண்டி
டார்ஜிலிங் இமாலய தொடர்வண்டி  
கல்கா-சிம்லா தொடர்வண்டி
கல்கா-சிம்லா தொடர்வண்டி  
சத்தீசுகரில் இயங்கும் ஓர் குற்றகலத் தொடர்வண்டி
சத்தீசுகரில் இயங்கும் ஓர் குற்றகலத் தொடர்வண்டி  
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.