குர்மான்பெக் பாக்கியெவ்

குர்மான்பெக் சலீயெவிச் பாக்கியெவ் (Kurmanbek Saliyevich Bakiyev, பிறப்பு: ஆகஸ்ட் 1, 1949) கிர்கிசுத்தானின் இரண்டாவது அரசுத்தலைவராக இருந்தவரும், அரசியல்வாதியும் ஆவார். 2005 இல் நாட்டில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து குடியரசுத் தலைவராக இருந்த அஸ்கார் அக்காயெவ் பதவியிழந்ததை அடுத்து பாக்கியெவ் நாட்டின் பதில் தலைவராக 2004 மார்ச் 24 இல் சட்டசபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 2010 இல் நாட்டில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, நாட்டில் இருந்து வெளியேறினார்.

குர்மான்பெக் பாக்கியெவ்
Курманбек Бакиев
கிர்கிஸ்தான் அரசுத்தலைவர்
பதவியில்
25 மார்ச் 2005  15 ஏப்ரல் 2010
15 ஆகஸ்ட் 2005 வரை பதில் தலைவராக
பிரதமர் மெடெத்பெக் கெரிம்கூலொவ்
பீலிக்ஸ் கூலொவ்
அசீம் இசபேக்கொவ்
அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ்
இஸ்கெண்டர்பெக் ஐதரலீயெவ்
ஈகர் சூதினொவ்
டானியார் ஊசினொவ்
முன்னவர் இசென்பாய் கதிர்பெக்கொவ் (பதில்)
பின்வந்தவர் ரோசா ஒட்டுன்பாயெவா
கிர்கிஸ்தான் பிரதமர்
பதவியில்
10 ஜூலை 2005  15 ஆகஸ்ட் 2005
குடியரசுத் தலைவர் அஸ்கார் அக்காயெவ்
இசென்பாய் கதிர்பெக்கொவ் (பதில்)
முன்னவர் மெடெத்பெக் கெரிம்கூலொவ் (பதில்)
பின்வந்தவர் பீலிக்ஸ் கூலொவ்
பதவியில்
25 மார்ச் 2005  20 ஜூன் 2005
28 மார்ச் 2005 வரை பதில்
குடியரசுத் தலைவர் அஸ்கார் அக்காயெவ்
முன்னவர் நிக்கலாய் தனாயெவ்
பின்வந்தவர் மெடெத்பெக் கெரிம்கூலொவ் (பதில்)
பதவியில்
21 டிசம்பர் 2000  22 மே 2002
குடியரசுத் தலைவர் அஸ்கார் அக்காயெவ்
முன்னவர் அமன்கெல்டி முரலீயெவ்
பின்வந்தவர் நிக்கலாய் தனாயெவ்
தனிநபர் தகவல்
பிறப்பு 1 ஆகத்து 1949 (1949-08-01)
மசடான், சோவியத் ஒன்றியம்
அரசியல் கட்சி அக் சொல்
வாழ்க்கை துணைவர்(கள்) தத்தியானா பாக்கியெவா
படித்த கல்வி நிறுவனங்கள் குய்பீஷெவ் தொழிநுட்பக் கல்லூரி
சமயம் சுணி இசுலாம்

அரசுத் தலைவராகும் முன்னர் பாக்கியெவ் கிர்கிஸ்தான் மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருந்தார். நாட்டின் தெற்குப் பகுதியிலேயே இவர் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தார். அக்டோபர் 2007 இல் பாக்கியெவ் அக் சொல் (பிரகாசமான வழி) என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்[1].

வாழ்க்கைக் குறிப்பு

கிர்கிஸ்தானின் மசடான் என்ற இடத்தில் பிறந்த பாக்கியெவ் 1972 ஆம் ஆண்டில் மின்பொறிமுறையில் பட்டப்படிப்பை முடித்தார். 1974 முதல் 1976 சோவியத் இராணுவப் பயிற்சியை முடித்து தொழிற்சாலை ஒன்றில் பிரதம பொறியாளர் ஆனார். 1990 ஆம் ஆண்டில் அரசியலில் இறங்கினார். ஆரம்பத்தில்ல் கொக்-யாங்கக் நகரத்தின் முதல் செயலராகவும் அந்நகரத்தின் சுப்ரீம் சோவியத் தலைவரானார். பின்னர் ஜலலாபாத் பிராந்தியத்தின் உதவி தலைவரானார்.

பிரதமர்

1995 இல் பாக்கியெவ் ஜலாலாபாத் மாகாணத்தின் ஆளுநராகவும் பின்னர் 2000, டிசம்பர் 21 முதல் 2002 மே 22 வரை கிர்கிஸ்தானின் பிரதமராக இருந்தார். தெற்கு கிர்கிஸ்தானில் அக்காயெவின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கலவரத்தை அடுத்து பாக்கியெவ் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

குடியரசுத் தலைவர்

2005 ஆண்டில் இடம்பெற்ற துலீப் புரட்சியை அடுத்து இடம்பெற்ற அதிபர் தேர்தலில் பாக்கியெவ் 89 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்[2]. 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.