குர்தி மொழி

குர்தி மொழி (Kurdish: Kurdî or کوردی), குர்து மக்களால் பேசப்படும் மொழியாகும். இது பெரும்பாலும், ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய குர்திஸ்தான் பகுதியிலேயே செறிந்துள்ளது. இம்மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானியக் குழுவைச் சேர்ந்த ஈரானிய மொழிகளில், மேற்கத்திய துணைக் குழுவைச் சேர்ந்தது. குர்தி மொழி, ஈரானிய மொழிகளின் வடமேற்குக் கிளையைச் சேர்ந்த பலூச்சி மொழி, கிலேக்கி மொழி, தாலிய மொழி ஆகியவற்றுக்கு நெருங்கியது. தென்மேற்குக் கிளையைச் சேர்ந்த பாரசீக மொழியுடனும் இதற்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

குர்தி மொழி
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ku
ISO 639-2kur
ISO 639-3Variously:
kur  குர்தி (பொது)
ckb  மையக் குர்தி
kmr  வடக்குக் குர்தி
sdh  தென் குர்தி
Geographic distribution of the Kurdish language (in turquoise)

பெரும்பாலான குர்து மக்கள், தங்கள் மொழியைக் குறிக்க குர்தி என்னும் பெயரைப் பயன்படுத்துவது இல்லை. அவர்கள் பேசும் பல்வேறுபட்ட கிளை மொழிகளின் பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன. குர்தி என்ற சொல் அவர்களுடைய இன அடையாளத்தைக் குறிக்கவும், வெளித் தொடர்புகளில் மொழியைக் குறிக்கவும் பயன்படுகிறது. இது, குர்தியின் கிளை மொழிகளுக்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காட்டுவதாகவும் அமைகின்றது.

குறிப்புக்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.