குரோனிது இலியூபார்சுகி
குரோனிது அர்க்கதியேவிச் இலியுபார்சுகி (Kronid Arkadyevich Lyubarsky, உருசியம்: Крони́д Арка́дьевич Люба́рский; 4 ஏப்பிரல் 1934, – 23 மே 1996) ஓர் உருசிய இதழியலாளரும் மாந்த உரிமைப் போராளியும் அரசியல் கைதியும் ஆவார்.
குரோனிது அர்கத்யேவிச் இலியுபார்சுகி Kronid Arkadyevich Lyubarsky | |
---|---|
![]() யூலியா விழ்சுனேவ்சுக்யா, இலியூத்மிளா அலெக்சியேவா, தீனா காமின்சுகாயா, குரோனிது இலியுபார்சுகி மியூனிக், 1978 | |
தாய்மொழியில் பெயர் | Кронид Аркадьевич Любарский |
பிறப்பு | ஏப்ரல் 4, 1934 பிசுக்கோவ், சோவியத் ஒன்றியம் |
இறப்பு | மே 23, 1996 62) பாலி, இந்தோனேசியா | (அகவை
தேசியம் | உருசியர் |
குடியுரிமை | சோவியத் ஒன்றியம் உருசியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் |
பணி | வானியல் வல்லுநர், வானியற்பியல், பத்திரிக்கையாளர் |
அறியப்படுவது | மாசுக்கோ எல்சிங்கி குழுவில் மனித உரிமைப் போராட்டம் |
அரசியல் இயக்கம் | சோவியத் ஒன்றியத்தில் இணக்கமற்றோர் இயக்கம் |
வாழ்க்கைத் துணை | கலீனா சலோவா |
தொடக்கநிலை வாழ்க்கைப்பணி
இவர் 1934 ஏப்பிரல் 4 இல் சோவியத் ஒன்றியத்தில் உள்ள பிசுகோவில் பிறந்தார். இவர் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் 1956 இல் பட்டம் பெற்றார். இவர் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழகத்தின் அனைத்து ஒன்றிய அறிவியல் தொழில்நுட்பத் தகவல் நிறுவனத்தில் வானியற்பியலாளராகப் பணிபுரிந்தார். இவரது ஆய்வுகள் வால்வெள்ளிகளிலும் வானியற்பியலிலும் அமைந்தது. இவர் சோவியத் ஒன்றிய செவ்வாய்த் தேட்ட கோளிடைப் பயணத் திட்டத்திலும் பணிபுரிந்தார். இவர் வானியற்பியலில் பலநூல்களை எழுதியதோடு பல நூல்களை மொழிபெயர்க்கவும் செய்தார். பிரெட் ஆயிலின் நூல் இவற்றில் குறிப்பிடத் தகுந்தது.[1]
மாந்த உரிமைச் செயல்பாடுகள்
புலம்பெயர்வு
பிந்தை சோவியத் உருசியா
சோவியத் ஒன்றியத் தகர்வுக்குப் பிறகு இவர் உருசியாவுக்குத் திரும்பிவந்து 1992 இல் தன் குடியுரிமையைப் பெற்றார்.
இறப்பும் தகைமையும்
இவர் இந்தோனேசியாவில் விடுமுறைச் சுற்றுலாவில் இருந்தபோது மாரடைப்பால் 1996 மே 23 இல் தன் 61 ஆம் அகவையில் இறந்தார்.
இவர் இணையத்தில் USSR News Brief (உருசியம்:Vesti iz SSSR) எனும் திங்களிருமுறை வரலாற்று இதழை உருசிய மொழியில் மூனிச்சில் இருந்து நடத்தினார் . இது சோவியத் ஒன்றியத்தின் 1978 முதல் 1987 வரையிலான காலகட்ட வரலாற்றாசிரியர்களைப் பற்றியும் மாந்த உரிமைச் செயல்முனைவுப் போராளிகளைப் பற்றியும் சிறிதும் பெரியதுமான பல அறிக்கைகள் இடம்பெற்றன.[2] (கீழே வெளி இணைப்புகளில் காண்க).
இவரது 1976 முதல் 1992 வரையிலான தொடக்க கால மாந்த உரிம்மைப் போராட்ட வாழ்க்கை 2000 இல் அவர்து இறப்புக்குப் பின்னர் பன்னாட்டுப் ஊடகப் பதிப்பு நிறுவனத்தால் ஏற்று நினைவுகூரப்பட்டது.[3] இவரை கடந்த ஐம்பது ஆண்டுகளின் உலக ஊடக விடுதலை வீரராக அறிவித்தது.
நூல்தொகை
- Любарский, Кронид (1962) (in Russian). Очерки по астробиологии. Moscow: USSR Academy of Sciences Publishing House.
- Любарский, Кронид; Вдовыкин, Геннадий (1969) (in Russian). Возникновение органического вещества в Солнечной системе: сборник статей. Moscow: Mir Publishers.
- Lubarsky, Cronid (1979) (in German). Soziale Basis und Umfang des sowjetischen Dissidententums. Köln: Bundesinstitut für Ostwissenschaftliche und Internationale Studien. https://books.google.com/books?id=5QU8AAAAMAAJ.
- Lubarsky, Cronid (1979). "Social basis and scope of Soviet dissidence". Osteuropa 29 (11): 923–935.
- Желудков, Сергей; Любарский, Кронид (1982) (in Russian). Христианство и атеизм. Brussels: Издательство "Жизнь с богом". https://books.google.com/books?id=pHUcAAAAMAAJ.
- Салова Г. И., தொகுப்பாசிரியர் (2001) (in Russian). Кронид. Избранные статьи К. Любарского. Moscow: Russian State University for the Humanities. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:5-7281-0406-1. http://www.sakharov-center.ru/asfcd/auth/?t=page&num=2287. (publicly available unabridged Russian text)
- Lubarsky, Cronid (May 1988). "The human rights movement and perestroika". Index on Censorship 17 (5): 16–20. doi:10.1080/03064228808534412. http://www.tandfonline.com/doi/abs/10.1080/03064228808534412.
மேற்கோள்கள்
- Wade, Nicholas (3 September 1976). "Kronid Lyubarsky: the Soviet state tries to unmake a scientist". Science 193 (4256): 863–864. doi:10.1126/science.193.4256.863. Bibcode: 1976Sci...193..863W.
- «Вести из СССР», 1978-1987.
- http://ipi.freemedia.at/awards/press-freedom-heroes/kronid-lyubarsky.html
வெளி இணைப்புகள்
- Wade, Nicholas (3 September 1976). "Kronid Lyubarsky: the Soviet state tries to unmake a scientist". Science 193 (4256): 863–864. doi:10.1126/science.193.4256.863. Bibcode: 1976Sci...193..863W.
- Farquharson, Marjorie (18 June 1996). "Obituary: Kronid Lyubarsky". The Independent. http://www.independent.co.uk/news/obituaries/obituary-kronid-lyubarsky-1337657.html.
- Салова-Любарская, Галина (2001). "Как сохранить память о человеке?" (in Russian). Index on Censorship (14). http://www.index.org.ru/journal/14/salova1401.html.
- (உருசிய மொழியில்) USSR News Brief, 1978-1987 archive.
- (உருசிய மொழியில்) Любарский Кронид Аркальевич (Articles on hro.org)