குரூக்கிசைட்டு

குரூக்கிசைட்டு (Crookesite) என்பது Cu7(Tl,Ag)Se4 அல்லது (Cu,Tl,Ag)2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் [3]அறியப்படும் ஒரு கனிமம் ஆகும். செலீனைடு வகை கனிமமான இது செப்பு மற்றும் செலீனியம் தனிமங்களுடன் மாறுபடும் தாலியம் மற்றும் வெள்ளி தனிமங்களால் ஆக்கப்பட்டுள்ளது.

குரூக்கிசைட்டு
Crookesite
பொதுவானாவை
வகைசெலீனைடு கனிமம்
வேதி வாய்பாடுCu7(Tl,Ag)Se4
இனங்காணல்
நிறம்ஈயச் சாம்பல்
படிக இயல்புபரவவிடப்பட்ட தழும்பு மற்றும் கிளை நரம்பு போன்று நுண்ணியதாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
படிக அமைப்புநான்முகம் - சர்வசம நான்முகம்
பிளப்புசெங்கோணத்தில் இரண்டு பிளவுகள், நன்று.
முறிவுநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2.5–3
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது.
ஒப்படர்த்தி6.90
மேற்கோள்கள்[1][2]

பண்புகள்

நீர்வெப்ப பாய்மங்களில் இருந்து வீழ்படிவாதல் முறையில் இக்கனிமம் உருவாகிறது. தாலியம் 16.3 சதவீதம், தாமிரம் 47.3 சதவீதம், வெள்ளி 2.9 சதவீதம் மற்றும் 33.6 சதவீதம் செலீனியம் என பகுதிப்பொருட்கள் இக்கனிமத்தில் சேர்ந்துள்ளன.[1]

நான்முகப் படிக அமைப்பில் படிகமாகியுள்ள குரூக்கிசைட்டு ஒளிபுகாத் தன்மையுடன் நீலநிறச் சாம்பல் முதல் இளஞ்சிவப்பு நீங்கிய பழுப்பு நிறமாக காணப்படுகிறது. 2.5 முதல் 3 என்ற மோவின் அளவுகோலில் 2.5 என்ற கடினத்தன்மை அளவும் 6.9 என்ற நீர் ஒப்படர்த்தியும் கொண்டுள்ளது.

பெயர் மற்றும் கண்டுபிடிப்பு

1866 ஆம் ஆண்டு சுவீடனைச் சேர்ந்த சிக்ரிகெரம் என்பவர் இக்கனிமத்தைக் கண்டறிந்தார். தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு (1832-1919) என்பவரின் பெயர் இக்கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. Webmineral site
  2. Handbook of Mineralogy
  3. http://www.mindat.org/min-1159.html Mindat
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.