குரு அங்கது தேவ்

குரு அங்கது தேவ் (Guru Angad Dev, பஞ்சாபி: ਗੁਰੂ ਅੰਗਦ ਦੇਵ, 31 மார்ச் 1504 – 28 மார்ச் 1552) பத்து சீக்கியக் குருக்களில் இரண்டாமவர் ஆவார். இவர் பஞ்சாபின் முக்த்சர் மாவட்டத்தில் சாரே நாகா என்ற சிற்றூரில் 1504ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று பிறந்தார். இவரது பிறப்பிற்குப் பிறகு இவருக்கு லெக்னா என்ற பெயர் சூட்டப்பட்டது. இவரது தந்தை சிறு வணிகராகவிருந்த பெரு மால் ஆகும். தாயார் மாதா ரமோ ஆகும்.[1]

குரு அங்கது தேவ்
ਗੁਰੂ ਅੰਗਦ
பிறப்புபாயி லெக்னா
மார்ச் 31,1504
மாத் தி சராய், முக்த்சர், பஞ்சாப், இந்தியா
இறப்புமார்ச்சு 28, 1552(1552-03-28) (அகவை 47)
கதூர் சாகிப், இந்தியா
மற்ற பெயர்கள்இரண்டாம் ஆசான்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1539–1552
அறியப்படுவதுகுர்முகி எழுத்துமுறையை சீர்தரப்படுத்தியவர்
முன்னிருந்தவர்குரு நானக்
பின் வந்தவர்குரு அமர் தாசு
பெற்றோர்மாதா ரமோ & பாபா பெரு மால்
வாழ்க்கைத்
துணை
மாதா கீவ்ஜி
பிள்ளைகள்பாபா தாசு, பாபா தத்து, பிபி அம்ரோ, பிபி அனோகி

1538இல் குரு நானக் தனது மகன்களையல்லாது தனது சீடரான லெக்னாவை தமது வாரிசாகவும் அடுத்த சீக்கிய குருவாகவும் தேர்ந்தெடுத்தார்.[2] லெக்னாவிற்கு அப்போது அங்கது என்ற பெயர் சூட்டப்பட்டது. குரு அங்கது என சீக்கியர்களின் இரண்டாவது குருவானார். தனது முதல் குரு தொடங்கியப் பணியை தொடர்ந்து வந்தார். தற்போதுள்ள குர்முகி எழுத்துமுறையை சீர்தரப்படுத்தினார்.

குரு அங்கது மாதா கீவ்ஜியை சனவரி 1520இல் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் (தாசு, தாது) இரண்டு மகள்களும் (அம்ரோ, அனோகி) பிறந்தனர். பாபர் படையெடுப்பிற்கு அஞ்சி இவரது தந்தையாரின் குடும்பம் முழுமையும் தங்கள் பரம்பரை சிற்றூரை விட்டு இடம் பெயர்ந்தனர்.பியாசு ஆற்றங்கரையில் கதூர் சாகிப் என்ற சிற்றூரில் குடியேறினர். இது அம்ரித்சரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது.

மேற்சான்றுகள்

  1. "Guru Angad". Punjabi University Punjabi.
  2. Shackle, Christopher; Mandair, Arvind-Pal Singh (2005). Teachings of the Sikh Gurus: Selections from the Sikh Scriptures. United Kingdom: Routledge. xiii–xiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-26604-1.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.