குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட்
குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட் (Queen's University Belfast) ஐக்கிய இராச்சியத்தின் வட அயர்லாந்தின் தலைநகர் பெல்பாஸ்ட்டில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக 1845 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1849 ஆம் ஆண்டு குயின்ஸ் கல்லூரி, பெல்பாஸ்ட் என்ற பெயரில் திறக்கப்பட்டது. ஆனாலும் இக்கல்லூரியின் வரலாறு 1810 ஆம் ஆண்டில் பெல்பாஸ்ட் ரோயல் அக்கடெமிக்கல் இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் இருந்து ஆரம்பிக்கிறது[2].
குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட் Queen's University Belfast | |
---|---|
![]() | |
நிறுவல்: | 1849 |
வேந்தர்: | ஜோர்ஜ் ஜே. மிட்ச்செல் |
துணைவேந்தர்: | பேராசிரியர் பீட்டர் கிரெக்சன் |
ஆசிரியர்கள்: | 1,600 |
மாணவர்கள்: | 24,560[1] |
இளநிலை மாணவர்: | 19,165[1] |
முதுநிலை மாணவர்: | 5,395[1] |
அமைவிடம்: | பெல்பாஸ்ட், வட அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம்
(54°35′3″N 5°56′5″W) |
இணையத்தளம்: | http://www.qub.ac.uk |
![]() |
குயின்ஸ் பல்கலைக்கழகம் பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் அமைப்பு, ஐரோப்பிய பல்கலைக்கழக அமைப்பு, மற்றும் அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் பல்கலைக்கழகங்களின் அமைப்புகள் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. இது 300 இற்கும் மேற்பட்ட துறைகளில் பல்வேறு மட்டங்களிலும் பட்டப்படிப்பை வழங்கி வருகிறது[3].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்

குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறைக் கட்டிடம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.