குமார் தர்மசேன

குமார் தர்மசேன (Kumar Dharmasena பிறப்பு: ஏப்ரல் 24, 1971, கொழும்பு) முன்னாள் இலங்கைத் துடுப்பாட்டக்காரரும் தற்போது நடுவராக செயலாற்றுபவருமாவார். 1996 உலகக்கிண்ணம் வென்ற இலங்கைத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினராக இருந்தவர்.இவர் ஓர் வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளருமாவார். தனது பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை 1994ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுடன் துவங்கினார். .

குமார் தர்மசேன
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
தரவுகள்
தேர்வுகள்ஒ.ப.து.கள்
ஆட்டங்கள் 31 141
ஓட்டங்கள் 868 1222
துடுப்பாட்ட சராசரி 19.72 22.62
100கள்/50கள் -/3 -/4
அதியுயர் புள்ளி 62* 69*
பந்துவீச்சுகள் 6939 7009
விக்கெட்டுகள் 69 138
பந்துவீச்சு சராசரி 42.31 36.21
5 விக்/இன்னிங்ஸ் 3 -
10 விக்/ஆட்டம் - இல்லை
சிறந்த பந்துவீச்சு 6/72 4/37
பிடிகள்/ஸ்டம்புகள் 14/- 34/-

9 பிப்ரவரி, 2006 தரவுப்படி மூலம்:

இவரது மறைவான பந்துவீசும் பாணி ஒருநாள் துடுப்பாட்டங்களுக்கு ஓர் சிறந்த பந்து வீச்சாளராக விளங்க உதவியது. 1998ஆம் ஆண்டு இவரது பந்து வீசும் விதத்தை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை செய்தபோது தமது மட்டைத் திறமையையும் வெளிக்காட்டினார். சூலை 2000 ஆண்டு இவரது செயல் அனுமதிக்கப்பட்டபின் பல ஒருநாள் துடுப்பாட்டங்களில் பங்கேற்றார். இருப்பினும் தேர்வுத் துடுப்பாட்டமெதிலும் பங்கேற்கவில்லை.

2009ஆம் ஆண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் நடுவராகப் பணியாற்றத் துவங்கினார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடந்த ஐடிபிஐ வெல்த்சுரன்ஸ் கிண்ணப் போட்டிகளில் செயலாற்றினார்.

வெளியிணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.