குபேர குசேலா
குபேர குசேலா 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி, மற்றும் பி. எஸ். இராமையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். குசேலர், குபேர குசேலராக ஆன பிறகு என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து, பி. எஸ். இராமையா இப்படத்துக்கான கதை, வசனத்தை எழுதியிருந்தார்.[1]
குபேர குசேலா | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். எஸ். மணி பி. எஸ். இராமையா |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் எஸ். கே. மொஹ்தீன் |
கதை | பி. எஸ். இராமையா |
இசை | குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் என். எஸ். பாலகிருஷ்ணன் |
நடிப்பு | பி. யு. சின்னப்பா பாபநாசம் சிவன் பி. எஸ். கோவிந்தன் என். எஸ். கிருஷ்ணன் டி. ஆர். ராஜகுமாரி டி. ஏ. மதுரம் |
வெளியீடு | சூன் 14, 1943 |
நீளம் | 17010 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
ஏழையான குசேலன் தன் நண்பன் கண்ணனைக் கண்டு அவனால் குபேரன் போன்ற செல்வத்தை அடைகிறார். அதனால் உலகம் குசேலனை பூலோக குபேரன் என அழைக்கிறது. இதனால் செல்வத்தின் அதி தேவதையான குபேரன் ஆத்திரம் அடைகிறார். அதைத் தொடர்ந்து குசேலனுக்கு எதிராக அவர் சதிசெய்கிறார்.[2] அளவுக்கு மீறி பணம் வந்த பிறகு குசேலர் காயகல்பம் சாப்பிட்டு இளைஞர் ஆகிறார். பின்னர் டி.ஆர்.ராஜகுமாரியை காதலிக்கிறார். இதனால் அவர் குடும்பத்தில் குழப்பங்களையும், திருப்பங்களும் ஏற்படுகின்றன.
நடிகர்கள்
- குபேர குசேலனாக பி. யு. சின்னப்பா
- ஏழை குசேலனாக பாபநாசம் சிவன்
- கிருஷ்ணனாக பி. எஸ். கோவிந்தன்
பாடல்கள்
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர். குன்னக்குடி வெங்கடராம ஐயர், எஸ்.எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.
- சரணாகதம் துணை பிராண நாதா (ராகம்: சுத்த சாவேரி)
- கண்ணா கண்ணா கண்ணா கருணை செய் கமலக் கண்ணா (ராகம்: காப்பி)
- மாலை போதாதோ உன் மனமுவந்த நறுமணமிகுந்த மலர் (ராகம்: காம்போதி)
- செல்வமே சுகஜீவாதாரம் (ராகம்: சாமா, ரஞ்சனி)
- நீ மயங்குவதேனோ வீணே (ராகம்: குந்தலவராளி)
- வசந்தன் பவனி வருவது பார் (ராகம்: ஆரபி)
- நடையலங்காரம் கண்டேன் (பி.யு.சின்னப்பா, ராகம்: கரகரப்பிரியா)
- யாரென்று நீ சென்றறிந்துவா பாங்கி (ராகம்: சங்கராபரணம்)
- ஆண்டருள் ஜகதம்பா யானுன் அடிமையல்லவோ (பி.யு.சின்னப்பா, ராகம்: கதனகுதூகலம்)
- மாதவமேது செய்தேனோ
- என்னை விட்டெங்கே சென்றீர் (ராகம்: ஹரிகாம்போதி)
- அங்குமிங்குமெங்குமே நிறைந்தவா (ராகம்: பெஹாக்)
- மணம் கமழ்ந்திடு பூவே (ராகம்: கதம்பம்)
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- "இளங்கோவன் டைரக்டர் ஆனார்: சோமுவுடன் இணைந்து மஹாமாயாவை இயக்கினார்". கட்டுரை. மாலை மலர் (2016 சூன் 15). பார்த்த நாள் 13 ஆகத்து 2018.
- அறந்தை நாராயணன் (நவம்பர் 10 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-8 மணிக்கொடி பி.எஸ்ராமையா". தினமணி கதிர்.
வெளி இணைப்புகள்
- Kubera Kuchela 1943, Blast from the past, by Randor Guy