சீன சண்டைக் கலைகள்

சீன சண்டைக் கலைகள் எனவும் மாண்டரின் மொழியில் வூசு (எளிய சீனம்: 武术; மரபுவழிச் சீனம்: 武術; பின்யின்: wǔshù) எனவும் குங்பூ என பிரபல்யமாக அழைக்கப்படுவது (சீனம்: 功夫; பின்யின்: gōngfu) சீனாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு விருத்தி செய்யப்பட்ட சீன சண்டைக் கலை முறைகள் ஆகும். இம் முறைகள் சண்டைக் கலைகளின் பொது தனித்தன்மைக்கு ஏற்ப "குடும்பங்களாக" (家, jiā), "பிரிவுகளாக" (派, pài) அல்லது "கற்பித்தலாக" (門, mén) வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக அவ்வாறான தனித் உடற் பயிற்சி உட்பட்ட தன்மைகள் மிருகம் போன்ற நடிப்புச் செயற்பாடாகவோ அல்லது சீனத் தத்துவஞானிகள், சமயங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றால் உயிர்ப்பூட்டப்பட்ட பயிற்சி முறைகளாகவோ காணப்படும். சுவாச மூலம் குவியச் செய்யபப்டும் முறைகள் அகம் (内家拳, nèijiāquán) எனவும், தசைகளை மேம்படுத்தி, நரம்புகளை வலிமைப்படுத்தி முக்கியத்துவம் கொடுக்கப்படும் முறைகள் புறம் (外家拳, wàijiāquán) எனவும் அடையாளப்படுத்தப்படும். புவியியல் அடிப்படையில் வடக்கு (北拳, běiquán) மற்றம் தெற்கு (南拳, nánquán) என வகைப்படுத்தப்படும் முறையும் முக்கியமானதொரு வகைப்படுத்தலாகும்.

இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.
Wushu
சீன எழுத்துமுறை 武術
சொல் விளக்கம் சண்டைக் கலைகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.