கிளைடு ஆறு

கிளைடு ஆறு (River Clyde, சுகாத்து: Watter o Clyde)இசுக்கொட்லாந்திலுள்ள ஓர் ஆறு ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நீளமான ஆறுகளில் ஒன்பதாகவும் இசுக்கொட்லாந்தில் மூன்றாவதாகவும் உள்ளது. இது கிளாஸ்கோ நகரத்தின் வழியாகச் செல்கிறது. பிரித்தானியப் பேரரசில் கப்பல் கட்டுவதற்கும் வணிகத்திற்கும் இது முதன்மையான ஆறாக விளங்கியது.

கிளைடு ஆறு
ஆறு
கிளாஸ்கோவின் புரூமிலாவில் செல்லும் கிளைடு ஆறு
நாடு இசுக்கொட்லாந்து
கவுன்ட்டிகள் தெற்கு இலனார்க்சையர், அர்கில், ஐர்சையர்
நகரங்கள் இலனார்க்கு, கிளாசுக்கோ, போத்வெல், கிரீனோக்கு
அடையாளச்
சின்னங்கள்
பால்சு ஆஃப் கிளைடு (அருவிகள்), போத்வெல் கோட்டை, கிளைடின் கழிமுகம்
உற்பத்தியாகும் இடம் தெற்கு இலனார்க்சையரிலுள்ள லோதர் குன்றுகள்
 - ஆள்கூறு 55°24′23.8″N 3°39′8.9″W
கழிமுகம் பிர்த் ஆஃப் கிளைடு
 - ஆள்கூறு 55°40′46.3″N 4°58′16.7″W
நீளம் 176 கிமீ (109 மைல்)
வடிநிலம் 4,000 கிமீ² (1,544 ச.மைல்)

புதிய தொழிற்புரட்சி சார்ந்த காலத்தையும் தற்கால உலகையும் விவரிக்க விரும்பிய ஜான் அட்கின்சன் கிரிம்ஷா, ஜேம்ஸ் கே போன்ற கலைஞர்களுக்கு கிளைடு ஆறு ஓர் அகத்தூண்டலாக அமைந்தது.[1]

ஊடகம்

மேற்சான்றுகள்

  1. Macmillan, Duncan (1994). Scottish Art in the 20th Century. Edinburgh: Mainstream Publishing. பக். 31–32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85158-630-X.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.