கிளார்க் கேபிள்

வில்லியம் கிளார்க் கேபிள் (பெப்ரவரி 1, 1901-நவம்பர் 16, 1960) ஓர் அமெரிக்க நடிகர் ஆவார். இவருக்கு "ஹாலிவுட்டின் அரசன்" என்று பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடியூட்டின் சிறந்த ஆண் நடிகர் பட்டியலில் இவர் ஏழாவது இடத்தில் உள்ளார்.

வில்லியம் கிளார்க் கேபிள்

கேபிள் 1940ம் வருடத்தில்
இயற் பெயர் வில்லியம் கிளார்க் கேபிள்
பிறப்பு பெப்ரவரி 1, 1901(1901-02-01)
காதிஸ், ஓஹாயோ, அமெரிக்கா
இறப்பு நவம்பர் 16, 1960(1960-11-16) (அகவை 59)
லாஸ் ஏஞ்சலஸ்
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1923–1960
துணைவர்
  • ஜோசபின் தில்லான்
         (m.1924–1930; விவாகரத்து)
  • மரியா "ரியா" பிராங்க்ளின் ப்ரென்டிஸ் லூகாஸ் லங்கம்
         (m.1931–1939; விவாகரத்து)
  • கரோல் லம்பார்ட்
         (m.1939–1942)
  • சில்வியா ஆஷ்லே
         (m.1949–1952; விவாகரத்து)
  • கே வில்லியம்ஸ்
         (m.1955–1960)
பிள்ளைகள்
  • ஜூடி லூயிஸ்
  • ஜான் கேபிள்
பெற்றோர்
  • வில்லியம் எச் கேபிள் (1870–1948)
  • அடெலின் ஹெர்ஷெல்மென் (1869–1901)

வாழ்க்கை மற்றும் தொழில்

ஆரம்ப வாழ்க்கை

கிளார்க் கேபிள் கடிட்ஜ், ஓஹியோவில் வில்லியம் ஹென்றி "வில்" கேபிள்(1870-1948) மற்றும் அவரது மனைவி அடிலினுக்கு(1869–1901) மகனாக பிறந்தார்.அவருக்கு பத்து மாத வயதாகும் போது த்னது தாயை இழந்துவிட்டார்.

கன் வித் த விண்ட்

விவியன் லெயிக்ஹ் உடன் கான் வித் த விண்ட் (1939) திரைப்படத்தில்

இப்படத்தில் முதலில் அவர் நடிக்க தயக்கம் காட்டிய போதிலும்,இப்படம் அவரது சிறந்த நடிப்பிற்காக அறியப்படுகிறது. பட்லரின் கடைசி வரியான "ஃப்ராங்லி, மை டியர், ஐ டோன்ட் கிவ் எ டாம்ன்," திரைப்பட வரலாற்றில் மிகவும் பிரபலமான வசனங்களில் ஒன்றாகும்.அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடியூட்டின் சிறந்த வசனங்களின் பட்டியலில் இது முதலாவது இடத்தில் உள்ளது.

கரோல் லம்பார்ட் இந்த புத்தகத்தை அவருக்கு பரிசளித்தபோது ரெட் பட்லெர் கதாபாத்திரத்தில் அவரை நடிக்கச் சொன்ன முதல் நபராக இருக்கலாம்,ஆனால் அவர் அதை படிக்க மறுத்துவிட்டார்.பொதுமக்களும், தயாரிப்பாளர் டேவிட் ஓ செல்ஸ்னிக்கும் கேபிள் இந்த கதாபத்திரத்தில் நடிக்க வேண்டுமென்று விரும்பினர்.ஆனால் செல்ஸ்னிக்கின் கீழ் நீண்ட கால ஒப்பந்தத்தில் எந்த ஆண் நட்சத்திரமும் இல்லாததால், அவர் மற்றொரு ஸ்டூடியோவின் நடிகரை கடன் வாங்க தேவை ஏற்பட்டது.கேரி கூப்பர் செல்ஸ்னிக்கின் முதல் விருப்பமாக இருந்தார்.கூப்பர் பட்லர் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டபோது, அவர் "ஹாலிவுட் வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியாக கான் வித் த விண்ட் இருக்க போகிறது",என்று கூறியதாக செய்திகள் வெளியாயின.பின்னர், செல்ஸ்னிக் கேபிள் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து மெட்ரோ கோல்ட்வின் மேயரிடமிருந்து அவரை கடன்பெறத் தீர்மானித்தார். ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகை மெக்டேனியல் இப்படத்தின் அட்லாண்டா, ஜியார்ஜியா திரையீட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கபடவில்லை என்று தெரிந்தவுடன்,கேபிள் திரையீட்டை புறக்கணிக்க முயற்சித்தார்.மெக்டேனியல் அவரை போகுமாறு கெஞ்சிய பின்னரே அவர் சென்றார் என கூறப்படுகிறது.

கேபிள் ஒரு முறை அவரது திரைவாழ்க்கை மங்கத் தொடங்கும் போதெல்லாம், கான் வித் த விண்டை மறு வெளியீடு செய்வதன் மூலம் அவரது புகழை புதுப்பிக்கலாம் என்றார் இருந்தபோதும் அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு சிறந்த முன்னணி நடிகராக தொடர்ந்தார்.

இரண்டாம் உலக போர்

கிளார்க் கேபிள் B-17 விமானத்துடன்,வருடம் 1943,இங்கிலாந்து

1942 இல்,அவரது மனைவி லம்பார்ட்டின் மரணத்திற்கு பின்னர்,கேபிள் அமெரிக்க விமான படையில் சேர்ந்தார். கேபிள் B-17 விமானத்தில் மே 4, முதல் செப்டம்பர் 23, 1943 வரை ஜெர்மனி உட்பட ஐந்து போர் பயணங்களை மேற்கொண்டார்.ஜெர்மனி மீதான தாக்குதலில், அவர் குழுவில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமுற்றனர், அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.இந்த செய்தி MGMஐ அடைந்த போது, ஸ்டூடியோ நிர்வாகிகள் அதன் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட நடிகரை போர் பயணம் அல்லாத ராணுவ பணியில் ஈடுபடுத்துமாறு ராணுவத்திடம் கோரிக்கை வைத்தனர்.மே 1944 ல், கேபிள் ராணுவ மேஜராக பதவி உயர்த்தப்பட்டார்.அவர் மற்றொரு போர் பயணத்தை எதிர்பார்த்திருக்கையில்,நார்மாண்டி படையிறக்கம் நடைபெற்றது மற்றும் எந்த பணி உத்தரவும் இல்லாமல் ஜூன் மாதம் சென்ற போது, கேபிளின் கோரிக்கையை ஏற்று ஜூன் 12, 1944 இல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.அவரது பணிவிடுப்பு பத்திரங்கள், பின்னாட்களில் அமெரிக்க ஜனாதிபதியான கேப்டன் ரானல்ட் ரேகன் ஆல் கையெழுதிடப்பட்டன. அடால்ஃப் ஹிட்லர் மற்ற நடிகர்களை விட கேபிள் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இரண்டாம் உலக போரின் போது ஹிட்லர் கேபிளை சிறிதும் காயம் அடையாத வகையில் பிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இரண்டாம் உலக போருக்குப் பின்

இரண்டாம் உலக போருக்கு பின்னர் கேபிளின் முதல் திரைப்படம் அட்வென்ச்சர்(1945), இப்படம் விமர்சன மற்றும் வணிகரீதியான தோல்வியைத் தழுவியது.கேபிளின் ஹக்ஸ்டர்ஸ்(1947) படம், போருக்கு பிந்தைய மாடிசன் அவென்யூ ஊழல் மற்றும் ஒழுக்க கேடு பற்றி நையாண்டி செய்யும் படம், இது அவரது நடிப்பிற்காக பாராட்டப்பட்டது.கேபிளின் கடைசி படம் மிஸ்ஃபிட்ஸ்(1961), மர்லின் மன்றோவுடன் இதில் நடித்திருந்தார்.இது இருவருக்கும் கடைசி படமாக அமைந்தது.

அரசியல்

பிப்ரவரி 1952 ல், அவர் நியூயார்க்கில் ந்டைபெற்ற ஒரு பேரணியில் கலந்துகொண்டபோது டுவைட் டி. ஐசனாவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தினார்.இச்சமயத்தில் தான் ஐசனோவரை தங்களது வேட்பாளராக்க அமெரிக்காவின் இரு கட்சிகளும் முயன்று வந்தன.கடுமையான இதய இரத்த உறைவால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கேபிள் 1960ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களித்தார்.

இறப்பு

கேபிள் நவம்பர் 16, 1960 இல் ஹாலிவுட்டின் பிரிஸ்பைடீரியன் மருத்துவமனையில் இதய இரத்த உறைவால் இறந்தார்,பத்து நாட்களுக்கு முன் 59 ஆம் வயதில் கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பின்னர்.உடலளவில் மிகுந்த சிரமத்துடன் த மிஸ்ஃபிட்ஸ் படத்தில் அவர் நடித்ததன் காரணமாக அவர் திடீர் மரணமடைந்ததாக ஊகங்கள் உள்ளன.கேபிள் அவரது மூன்றாவது மனைவி, கரோல் லம்பார்ட் அருகில் க்ளொன்டேல், கலிபோர்னியாவில் புதைக்கப்பட்டார்.

கேபிள் பற்றிய கூற்றுகள்

கேபிள் 1938ம் வருடத்தில்

ஒருமுறை ஆர்தர் மில்லர், த மிஸ்ஃபிட்ஸ் ஆசிரியர், கேபிளை பற்றி கூறும்போது "எப்படி வெறுப்பது என்று தெரியாத மனிதன்" என்று கூறினார்.

நடிகை ஜோன் க்ராஃபோர்ட் கேபிளை பற்றி கூறும்போது "அவர் எங்கு சென்றாலும் ஒரு அரசனைப் போல இருந்தார்" என்றார்.

ராபர்ட் டெய்லர் கேபிள் "ஒரு உயர்ந்த மனிதர்,இனி மற்றொரு கிளார்க் கேபிள் உருவாவது சந்தேகமே அவர் ஒரு தனித்துவமானவர்" என்று கூறினார்.

அவர் தனது ஒப்புமைக்கு பொருத்தமில்லை என்று உணர்ந்த ஸ்கிரிப்ட் அம்சங்களை மாற்றுவதன் காரணமாக விமர்சிக்கப்பட்டார்.ஒருமுறை ஜேம்ஸ் கார்னர் கதாசிரியர் லார்ரி கெல்பர்ட் கூறியதாக சொன்னது "கேபிளை உடையும் நீர்மூழ்கி கப்பல் கீழே கொண்டு போக முடியாது (Run Silent, Run Deep படத்தின் கடைசிப்பகுதி அதன் அடிப்படையான புத்தகத்தில் இருந்து வேறுபட்டு முடிவடைந்ததை சுட்டிக்காட்டி),ஏனெனில் கேபிள் மூழ்குவதில்லை" என்றார்.

திரைப்படங்கள்

கேபிள் 1924 மற்றும் 1930 இடையே 13 படங்களில் ஒரு துணை நடிகராக தோன்றினார். பின்னர் அவர் 17 "குறும்படம்" படங்களில் அவராகவும், 67 திரையரங்குகளில் வெளியான படங்களிலும் தோன்றினார்.காம்பாக்ட் அமெரிக்கா என்னும் ஒரு இரண்டாம் உலகப் போர் பிரச்சார படத்திலும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

  • Harris, Warren G. (2002). Clark Gable: A Biography. New York: Harmony. ISBN 0-609-60495-3.
  • Lewis, Judy. Uncommon Knowledge (book by Gable's daughter with Loretta Young). (Pocket Books/Simon & Schuster 1994), ISBN 0-671-70019-7
  • Spicer, Chrystopher (2002). Clark Gable: Biography, Filmography, Bibliography. Jefferson, North Carolina: McFarland & Company. ISBN 0-7864-1124-4.
  • Clark Gable in the 8th Air Force, Air Power History, Spring 1999
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.