கிறிஸ்தவச் சிலுவை

கிறிஸ்தவச் சிலுவை (Christian Cross) என்பது இயேசுவின் மரணத்திற்குக் கருவியைக் குறிக்கும் ஒன்றும், நன்கு அறியப்பட்ட கிறிஸ்தவச் சின்னமும் ஆகும்.[1] இது சிலுவையிலறையப்படுதலுக்கும், (சிலுவை பொதுவாக, இயேசுவின் உடலை பிரதிநிதித்துவப்படுத்தும் முப்பரிமானமாக உள்வாங்குகிறது) சிலுவை சின்னங்களின் பொதுவான ஒன்றுமாகும்.

ஓர் இலத்தீன் சிலுவை
சிலுவையிலறையப்பட்ட இயேசு உள்ளிட்ட காட்சிப்படுத்தலில் இலத்தீன் சிலுவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

வடிவங்கள்

சிலுவை பெயர்விளக்கம்படம்
எருசலேம் சிலுவை

நான்கு சிறிய கிரேக்க சிலுவைகளால் சூழப்பட்ட பெரியதொரு கிரேக்க சிலுவையைக் கொண்டுள்ளது. "சிலுவைப் போர்வீரர்களின் சிலுவை" எனவும் அழைக்கப்படுகிறது.

அங்க்

நைல் நதியின் திறப்பு எனவும் அழைக்கப்பட்டது. பழைய எகிப்தில் வாழ்கையின் அடையாளமாகும். கிறிஸ்தவர் இதனை கைப்பிடி சிலுவை என அழைத்தனர்.

கொப்டியரின் சிலுவை

ஒரு சிறிய வட்டத்திலிருந்து வெளிவரும் நான்கு சமனான பாதங்களையும், இயேசுவை சிலுவையில் அறைந்த ஆணிகளை குறிக்கும் - நான்கு சாய்வான T வடிவவங்களும் கொண்டது.

கிரேக்க சிலுவை

இதன் நான்கு பாதங்களும் ஒன்றுக்கொன்று சமனாகும்.

பிசன்டீன் மரபுவழி சிலுவை

கிழக்கு மரபுவழி திருச்சபையால் பயன்படுத்தப்படும் சிலுவையாகும். சிலுவையில் மேலதிகமாக காணப்படும் கோடுகளில் மேல்கோடு குற்றப்பாதாகையையும் கீழேசாய்வாக காணப்படும் கோடு பாத இருப்பையும் குறிக்கிறது. கிடை பாதத்தின் முடிவில் காணப்படும் IC XC என்பன இயேசுவின் பெயரை குறிக்கிறது.

திவ்விய சிலுவை

இது கெல்டிக் மக்களால் பயன்படுத்தப்படும் சிலுவையாகும். இது அயர்லாந்து மற்றும் பிரித்தானியாவிலும் பரவலாக காணப்படுகிறது.

பலியின் சிலுவை

தலைக்கீழான வாள்உரு ஒன்று பதிக்கப்பட்ட இலத்தீன் சிலுவையாகும். இது பொதுநலவாய நாடுகளின் போர் மயானங்களிலும் போர் நினைவு கட்டிடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

புனித அந்தரேயர் சிலுவை

இது சுகொட்லாந்தின் தேசிய கொடியில் பயன்படுத்தபடுகிறது. புனித அந்த்ரேயர் இவ்வாறான ஒரு சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யபட்டார். இதனால் இப்பெயர் ஏற்பட்டது.

புனித ஜோர்ஜ் சிலுவை

இங்கிலாந்தின் தேசிய கொடியில் பயன்படுத்தப்பட்டுகிறது.

புனித பேதுரு சிலுவை

தலக்கீழான இலத்தீன் சிலுவையாகும். புனித பேதுரு தலக்கீழான சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டதால் இச்சிலுவைக்கு இப்பெயர் கிடைத்தது. இன்று கிறிஸ்தவத்துக்கு எதிரான குழுக்கள் இதை பயன்படுத்துகின்றன.

அனுராதபுரச் சிலுவை

இலங்கையில் கிறித்தவம் தொடர்பான பண்டைய (ஏ. 5 ஆம் நூற்றாண்டு) கிறித்தவச் சின்னம் அனுராதபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால் அனுராதபுரச் சிலுவை என்ற பெயரைப் பெற்றது. திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணத்திகாக சின்னத்தில் இச்சிலுவை இடம்பெற்றிருந்தது.

புனித தோமாவின் சிலுவை

இந்தியாவில் புனித தோமா கிறித்தவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பண்டைய கிறித்தவச் சிலுவை.

குறிப்பிடத்தக்க சிலுவைகள்

உசாத்துணை

  1. Christianity: an introduction by Alister E. McGrath 2006 ISBN 1-4051-0901-7 pages 321-323

இவற்றையும் காண்க

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.