கிரத்திக்கா தீர்

கிரத்திக்கா தீர் அல்லது கிரத்திக்கா செங்கர் (Kratika Dheer or Kratika Sengar, சூலை 3, 1986) இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் கசௌத்தி சிந்தகி கே என்ற இந்தியத் தொலைக்காட்சித் தொடரில் பிரேர்னாவாக (இரண்டு) என்ற கதாபத்திரத்தில் நடித்ததால் பிரபலமானார்.[1] இவர் கியுங்கி சாசு பி கபி பகூ தி என்ற தொலைக்காட்சித் தொடரில் சாஞ்சி எனும் கதாபாத்திரமாகச் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.[2] 9எக்சில் ஒளிபரப்பப்பட்ட கியா தில் மே ஏ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நைனா எனும் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.[3] இலக்சு கோன் சீத்தெக பாலிவுடு கா திக்கெட்டு எனும் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியுள்ளார்.[4] இவர் ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை எனும் தொடரில் இராணி இலட்சுமிபாயாக முதன்மைப் பாத்திரமேற்று, இராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்றை நடித்துக் காட்டினார்.[5] இப்போது, மறுமணம் என்ற ஜீ தமிழ்த் தொலைக்காட்சித் தொடரில் ஆர்த்தி எனும் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.[6]

கிரத்திக்கா தீர்
ஜான்சி ராணியில் கிரத்திக்கா தீர்
பிறப்பு3 சூலை 1986 (1986-07-03)
கான்பூர், இந்தியா.
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2007-தற்போது
வாழ்க்கைத்
துணை
நிக்கித்தின் தீர்

ஆரம்ப வாழ்க்கை

கிரத்திக்கா செங்கர் சூலை 3, 1985இல் கான்பூரில் பிறந்து தில்லியில் பட்டம் பெற்றுக் கொண்டார். நடிகையாக வருவதற்கு முன்பு கிரத்திக்கா விளம்பர நிறுவனமொன்றிலும் அங்கமாத் தொலைக்காட்சியிலும் வேலை செய்தார்.[7]

தொழில்

தொலைக்காட்சி

கசௌத்தி சிந்தகி கேயில் பிரேர்னாவாக (இரண்டு) நடித்ததிலிருந்து கிரத்திக்கா குறுகிய காலத்திலேயே பிரபலமானார்.[8]

ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதையில் இவர் முதன்மைப் பாத்திரமான இராணி இலட்சுமிபாயாக நடித்தார்.[9] இப்பாத்திரம், தொலைக்காட்சித் தொடர்த் துறையில் கிரத்திக்காவுக்குப் பெயர் தேடித் தந்தது. தற்போது மறுமணம் என்ற தொடரில் ஆர்த்தியாக நடித்து வருகிறார்.[10] தொடரின் பெயர் குறிப்பிடுவது போல இத்தொடர் மறுமணம் செய்யும் ஒரு கைம்பெண்ணைப் பற்றியது.[11] இத்தொடரில் குர்மீத்து சௌத்ரியும் நடித்து வருகின்றார்.[12] பெப்ரவரி 20, 2012இலிருந்து இத்தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.[13]

குறும்படம்

அபிசேக்கு சந்திராவினால் இயக்கப்பட்ட இரீடு மை சைலன்சு எனும் குறும்படத்திலும் கிரத்திக்கா நடித்துள்ளார்.[14]

தொலைக்காட்சி

தொடர்கள்

ஆண்டுதொடர்பாத்திரம்துணை நடிகர்கள்அலைவரிசை
2007கியுங்கி சாசு பி கபி பகூ திசாஞ்சிநமன் சாஇசுட்டார் பிளசு
2007கசௌத்தி சிந்தகி கே பிரேர்னா (இரண்டு)சன்னி நிசார், நமன் சாஇசுட்டார் பிளசு
2008கியா தில் மே ஏ நைனாஆமிர் அலி9எக்சு
2009கிசு தேசு மே ஏ மேரா தில்சிம்ரன்அர்சது சோப்ராஇசுட்டார் பிளசு
2010ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை இராணி இலட்சுமிபாய்சமீர் தர்மாதிக்காரிஜீ தமிழ்
2012மறுமணம்ஆர்த்திகுர்மீத்து சௌத்ரிஜீ தமிழ்

குறும்படம்

ஆண்டுகுறும்படம்துணை நடிகர்கள்
2011இரீடு மை சைலன்சுஅட்சய் மிட்டல், விசய் சூரியா

விருதுகள்

  • ஜீ இரிசுத்தே விருது-விருப்பமான மகள் (2010)[15]
  • பிகு தெலிவிசன் விருது-வீரப் பெண் கதைமாந்தர் (2011)[16]
  • த குளோபல் இந்திய விலிம் அண்டு தெலிவிசன் ஆனர்சு-சிறந்த புத்தம்புதிய பெண் முகம் (2011)

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Desiscans.comஇற்காக அழகான தொலைக்காட்சி நடிகையான கிருத்திக்கா சிங்காலுடன் தனிப்பட்ட நேர்காணல் (ஆங்கில மொழியில்)
  2. 'புனர் விவா'வில் திரை வருகையைப் பற்றிக் கிரத்திக்கா செங்கர் கதைக்கிறார் (ஆங்கில மொழியில்)
  3. கியா தில் மே ஏ நடிகர்கள் (ஆங்கில மொழியில்)
  4. கிரத்திக்கா செங்கர் அறிமுகம் (ஆங்கில மொழியில்)
  5. 'இராணி இலட்சுமிபாய், நான், இருவரும் எது வரியோ அதற்காகப் பேராடுவோம்' கிரத்திக்கா (ஆங்கில மொழியில்)
  6. புனர் விவா நடிகர்கள் (ஆங்கில மொழியில்)
  7. கிரத்திக்கா செங்கர் பற்றி (ஆங்கில மொழியில்)
  8. கசௌத்தி சிந்தகி கே நடிகர்கள் (ஆங்கில மொழியில்)
  9. சான்சி, கிரத்திக்கா செங்கர் 20 அடிகள் உயரமான சுவரைத் தாண்டிப் பாய்கிறார் (ஆங்கில மொழியில்)
  10. புனர் விவாவில் குர்மீத்து செள்திரியும் கிரத்திக்கா செங்கரும் (ஆங்கில மொழியில்)
  11. புனர் விவா-சிந்தகி மிலேகி தோபாரா பற்றி (ஆங்கில மொழியில்)
  12. புனர் விவா-நடிகர்கள் & குழு (ஆங்கில மொழியில்)
  13. படல வழிகாட்டி (ஆங்கில மொழியில்)
  14. இரீடு மை சைலன்சு (2011) (ஆங்கில மொழியில்)
  15. ஜான்சி ராணி: ஒரு பெண்ணின் துணிவு பற்றிய ஒரு கதை (ஆங்கில மொழியில்)
  16. பிகு தெலிவிசன் விருதுகள் 2011 (விருது) (ஆங்கில மொழியில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.