கிரண் தேசாய்

கிரண் தேசாய் (Kiran Desai, பிறப்பு: செப்டம்பர் 3, 1971) இந்தியாவில் பிறந்த பெண் எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ் (The Inheritance of Loss) என்னும் ஆங்கில நாவலுக்கு 2006 ஆம் ஆண்டுக்குரிய புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. புக்கர் பரிசு பெற்ற மிகக் குறைந்த வயதுடைய பெண் எழுத்தாளர் என்ற பெயரையும் பெற்றுள்ள இவர், புகழ் பெற்ற பெண் எழுத்தாளரான அனிதா தேசாயின் மகளாவார். அனிதா தேசாய் புக்கர் பரிசுக்காக மூன்று முறை இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், அவருக்கு இப்பரிசு கிடைக்கவில்லை.

கிரண் தேசாய்

கிரண் தேசாய், 2007
பிறப்பு கிரண் தேசாய்
Kiran Desai
செப்டம்பர் 3, 1971 (1971-09-03)
புது தில்லி, இந்தியா
தொழில் புதின எழுத்தாளர்
நாடு இந்தியர்
எழுதிய காலம் 1998 - இன்று
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
The Inheritance of Loss
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
புக்கர் பரிசு (2006)

கிரண் தேசாய் 1971 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி இந்தியாவின் தலை நகரமான புதுடில்லியில் பிறந்தார். இவருக்கு 14 வயதானபோது, இவரது குடும்பம் ஐக்கிய இராச்சியத்துக்குக் குடிபெயர்ந்தது. அடுத்த ஆண்டே இவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினர்.

கிரண் தேசாய் தனது பாடசாலைக் கல்வியை மசச்சூசெட்ஸ் இல் பெற்றுக்கொண்டார். பின்னர், ஹொலின்ஸ் பல்கலைக் கழகத்தின், பென்னிங்டன் கல்லூரியிலும், கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.

இவரது எழுத்தில் இவரது தாயார் அனிதா தேசாய் தாக்கம் உண்டு.

விருதுகளும் அங்கீகாரமும்

இவரது முதல் நாவலான Hullabaloo in the Guava Orchard 1998ல் வெளியிடப்பட்டது. இந்நாவல் பெட்டி ட்ராஸ்க் விருதைப் (Betty Trask Award) பெற்றுள்ளது

இரண்டாவது நாவலான The Inheritance of Loss(2006) பல இலக்கிய திறனாய்வாளர்களின் பாராட்டினைப் பெற்றுள்ளதுடன் 2006 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசினையும் இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

எழுதிய நூல்கள்

  • Hullabaloo in the Guava Orchard, Faber and Faber, 1998, ISBN 0-571-19336-6
  • The Inheritance of Loss, Hamish Hamilton Ltd, 2006, ISBN 0-241-14348-9

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.