கிடியொன் சண்டுபெக்கு
கிடியொன் சண்டுபெக்கு (கிடியோன் சண்ட்பாக், Gideon Sundbäck, ஏப்ரல் 24, 1880 – சூன் 21, 1954) சுவீடிய - அமெரிக்க மின்பொறியியலாளர். சுவீடனில் பிறந்த இவர் 1905 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். நவீன இணை பல்பட்டிகைகளுக்கு (சிப் - zip) அடிப்படையாக அமைந்த சிப் பொறிமுறையை இவர் 1914 ஆம் ஆண்டு வடிவமைத்தார். 1917 ஆம் ஆண்டு அதற்கான காப்புரிமையைப் பெற்றார்.
கிடியொன் சண்டுபெக்கு Gideon Sundbäck | |
---|---|
![]() | |
பிறப்பு | ஏப்ரல் 24, 1880 சிமாலாந்து, சுவீடன் |
இறப்பு | சூன் 21, 1954 74) மெட்வில், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை
கல்லறை | கிரீண்டேல் சவக்காலை |
தேசியம் | சுவீடிய - அமெரிக்கர் |
பணி | வணிகர் |
அறியப்படுவது | இணை பல்பட்டிகையை வடிவமைத்தவர் |
வாழ்க்கைத் துணை | எல்வீரா ஆரன்சன் (1909) |
2012 ஏப்ரல் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூகிள் தனது கூகிள் டூடுலாக ஸிப் ஒன்றை வடிவமைத்துள்ளது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.