காறை எலும்பு முறிவு
காறை எலும்பு முறிவு எல்லா வயதினரிலும் ஏற்பட வாய்ப்புள்ள பொதுவான ஓர் எலும்பு முறிவாகும். கையை நீட்டிய படி கீழே விழுவதாலோ அல்லது தோள் பட்டையில் அடி படுவதாலோ இது உண்டாகிறது.
காறை எலும்பு முறிவு Classification and external resources | |
இடப்புற காறை எலும்பு முறிவின் X - கதிர்ப்படம் | |
ஐ.சி.டி.-10 | S42.0 |
---|---|
ஐ.சி.டி.-9 | 810 |
MedlinePlus | 001588 |
ஈமெடிசின் | orthoped/50 |

காறை எலும்பின் நீளத்தை உள், நடு மற்றும் வெளி என்று முப்பங்காகப் பிரித்தால் நடுப்பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையே உள்ள பகுதியே பெரும்பாலும் முறிவுக்கு ஆளாகும் பகுதியாகும். காறை எலும்பில் பொருந்தியுள்ள தசைகள் சுருங்குவதால் முறிவடைந்த இரு பகுதிகளும் இடம் நகருகின்றன. ஸ்டெர்னோகிளிடோமாஸ்டாய்டு (sternocleidomastoid) தசை சுருங்குவதால் நடுவொட்டிய (medial) பகுதி மேல் நோக்கி இடம் பெயருகிறது. பெக்டோரலிஸ் மேஜர் (pectoralis major)தசை சுருங்குவதால் நடு விலகிய (lateral) பகுதியை கீழ் நோக்கியும் நடுநோக்கியும் இழுக்கும்.
நோயறிதல்
விபத்து - அடிபட்ட பின் வலி மற்றும் வீக்கம் ஏற்படுதல் X - கதிர் படத்தில் எலும்பு முறிவு தெளிவாகத் தெரியும்.
மருத்துவம்
காறை எலும்பு முறிவு எளிதில் சேரக் கூடியது. பெரும்பாலான நோயருக்கு முக்கோண வடிவ தாங்குவானே போதும். இளம் வயதினருக்கு 8-வடிவக் கட்டு போட வேண்டும். வெகு அரிதாகவே அறுவை சிகிச்சை தேவைப்படும்.
கோளாறுகள்
விரைவாக ஏற்படும் கோளாறுகள்
- முறிந்த பகுதி கீழ்க்காறை எலும்பு குருதிக் குழாய்களைக் (subclavicular vessels)
காயப்படுத்துதல்
தாமதமாக வரும் கோளாறுகள்
- தோள்பட்டை விறைப்பு (shoulder stifness)
- முறிந்த பகுதிகள் தவறாகச் சேருதல் (malunion)
- முறிந்த பகுதிகள் சேராமலே போதல் (nonunion)