காரைதீவு (யாழ்ப்பாணம்)
காரைதீவு (Karaitivu) யாழ்ப்பாணத்தின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 15 கிலோமீட்டர் (9 மைல்) தொலைவில் உள்ள வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். காரைதீவு தமிழ் மொழி்யில் காரை புதர்ச்செடிகள் நிறைந்த தீவு என்று பொருள்படுகிறது. இது தமிழ் வார்த்தையான காரை என்னும் (ரூபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த வேபரா டெட்ராண்ட்ரா என்னும் முட்கள் நிறைந்த செடியாகும்).[1]
![]() ![]() காரைதீவு | |
புவியியல் | |
---|---|
ஆள்கூறுகள் | 9°44′03″N 79°52′33″E |
பரப்பளவு | 22.95 km2 (8.86 sq mi) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 9,576 |
அடர்த்தி | 417 |
மொழிகள் | தமிழ் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
இடச்சுகாலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஆம்ஸ்டர்டாம் என அறியப்பட்ட இந்த தீவு 22.95 சதுர கிலோமீட்டர் (8.86 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது.[2][3] இந்த தீவு ஒன்பது கிராம சேவையாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அதன் மொத்த மக்கள் தொகையில் 9,576 பேர் 2012 கணக்கெடுப்புகளில் இருந்தனர்.[4]
காரைதீவு யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு ஒரு தரைப்பாலம் வழியாக இணைக்கப்பட்டுள்ளதுடன், அண்டைப் பிரதேசமான வேலணை தீவில் உள்ள ஊர்காவற்துறைக்குப் படகுச் சேவையைக் கொண்டுள்ளது.[5][6] தீவின் முக்கிய நகரம் காரைநகர் ஆகும்.[7] பிரபலமான
காசுவரினாகடற்கரை (en:Casuarina Beach) இந்தத் தீவில் அமைந்துள்ளது.[8]
மேற்கோள்கள்
- "Know the Etymology: 68 - Kaaraitheevu (Kaarainakar)". தமிழ்நெட். 5 January 2008. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=23260.
- Attygalle, Randima (21 December 2014). "Restoring the Jaffna Fort". தி ஐலண்டு (இலங்கை). http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=116279.
- Fernando, Srimal (3 October 2005). "Sights and sounds of Jaffna". Daily News. http://archives.dailynews.lk/2005/10/03/fea03.htm.
- Sivendran, S. (2 January 2000). "Kayts, a different world". Sunday Times]]. http://www.sundaytimes.lk/000102/splus2.html#2LABEL1.
- Ferdinando, Shamindra (8 May 2013). "Daring response to threat on Elara base". தி ஐலண்டு (இலங்கை). http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=78510.
- "Casuarina Beach On Karaitivu Island". த சண்டே லீடர். 12 August 2012. http://www.thesundayleader.lk/2012/08/12/casuarina-beach-on-karaitivu-island/.
வெளி இணைப்புகள்
பொதுவகத்தில் காரைதீவு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.