காம்மா கதிர்
காம்மா அலைகள் (Gamma Rays) மின்காந்த அலை வரிசையில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பகுதியாகும். அலைநீளம் மிகவும் குறுகியது. ஒரு மீட்டரில் 10 டிரில்லியனில் ஒரு பங்கை விட குறைவான அலைநீளத்தை உடையது. எக்ஸ்-ரே கதிர்களை விட அதிக ஆற்றலோடு ஊடுருவக் கூடியது. அணுக்களின் கதிரியக்கத்திலும், அணுக்கரு பிளவுபடும் போதும் இது வெளிப்படும். எக்ஸ்-ரே படங்களை விட நுணுக்கமாக உடல் கூற்றை அறியப் பயன்படுத்தப் படுகிறது.

பூமியின் நிலாவை காம்மா கதிர்வீச்சில் காணும்பொழுது சூரியனைவிட "வெளிச்சம்" (காம்மாக் கதிர் அடர்த்தி) உடையதாகக் காணப்படுகின்றது. இப் படம் காம்ப்டன் காம்மா கதிர் வானாய்வகம் (Compton Gamma Ray Observatory) என்னும் செயற்கைத் துணைக்கோள்வழி பெற்றது.
அண்ட வெளியில் நட்சத்திரங்களின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய நுட்பச்செய்திகளை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.

வானம் முழுவதிலும் 100 MeV அல்லது அதனைவிட கூடுதலான ஆற்றல் உள்ள காம்மாக் கதிர் வீச்சுப் படம். காம்ப்டன் காம்மா கதிர் வானாய்வகம் (Compton Gamma Ray Observatory) வழி எடுத்த படம் (லருவியின் பெயர் EGRET). வானத்தில் காலக்சித் தளத்தில் தெரியும் வெளிச்சமான புள்ளிகள் பல்சார்களில் (pulsar) இருந்தும் மேலும் கீழும் தெரியும் புள்ளிகள் குவாசார்களில் (quasars) இருந்தும் வருவதாகக் கருதப்படுகின்றது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.