வளையல்
வளையல் (இந்தி: சூடி, வங்கம்: சூரி, கன்னடம்: கஜின பலே, தெலுங்கு: காசுலு, மலையாளம்: வளை, நேபாளி: சுரா) என்பது இரண்டு கைகளிலும் மணிக்கட்டில் அணியும் ஒரு அணிகலனாகும். பொதுவாக வட்ட வடிவமானது. ஆனால் வளையக் கூடியதல்ல. இது ஒரு இந்தியப் பாரம்பரிய ஆபரணமாகும். தங்கம், அலுமினியம், பிளாட்டினம், கண்ணாடி, மரம் எனப் பலதரப்பட்ட பொருட்களால் உருவாக்கப்படுகின்றன.


பெரும்பாலும் இந்தியா மற்றும் வங்க தேசம் போன்ற தென் ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்துப் பெண்களாலும் ஓரளவு ஆண்களாலும் வளையல் அணியப்படுகிறது. மணப்பெண் தன திருமணத்திலும் தொடர்ந்து முதலிரவு சடங்குகளிலும் வளையல்களை அடுக்கிக் கொள்கிறாள். பச்சிளம் பெண் குழந்தை முதல் வயதில் முதிர்ந்த பெண்மணி வரை பல விதமான வளையல்களை அணிகின்றனர். சீக்கிய ஆண்கள் தங்கள் மணிக்கட்டில் கடா அல்லது கரா என்ற பெயரில் ஒற்றை வளையலை அணிகின்றனர். சீக்கிய மணப்பெண்ணின் தந்தை மணமகனுக்கு ஒரு மோதிரம், ஒரு கடா அல்லது கரா (இரும்பு அல்லது ஸ்டீலில் செய்யப்பட்டது) மற்றும் மொஹ்ரவையும் அளிக்கிறார்[1]. சூடா என்பது பஞ்சாபிப் பெண்களால் திருமணத்தின் பொது சிவப்பு வெள்ளை நிறங்களில் அணியும் வளையல் வகையாகும். மரபுப்படி ஒரு பெண் வளையல்களை வாங்கக் கூடாது. உலகிலேயே மிகுந்த அளவில் வளையல் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில் உள்ள மொராதாபாத் என்னும் நகராகும். முறையான வளையல்கள் ஆபரணமாகவே அணியப்படுகின்றன. கைப்பை போன்ற பொருட்களைத் தொங்கவிட வசதியாக சில வளையல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
வரலாறு

கடல் சிப்பி, தாமிரம், தங்கம், அகேட், சால்சிதோனி போன்ற பொருட்களிலான வளையல்கள் இந்தியாவில் முற்றிலும் வெவ்வேறு இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன[2]. இடக்கையில் வளையல்கள் அணிந்து நட னமாடும் ஒரு பெண்ணின் உருவம் மோகன்ஜோ தாரோ அகழ்வாய்வுகளில் (கி.மு 2600) கிடைக்கின்றன[3].
இந்தியால் மகுஜ்ஹாரி என்னுமிடத்தில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த செம்பு வளையல் மற்றொரு சரித்தர சான்றாகும். அடுத்து வேலைப்படமைந்த வளையல்கள் மௌரிய சாம்ராஜ்ஜிய (கி.மு 322 - 185) காலத்தது ஆகும். பொன் வளையல்கள் வரலார்ருச் சிறப்பு மிக்க தட்சசீலம் (கி.மு ஆறாம் நூற்றாண்டு) என்ற இடத்தில் அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. கலைநயமிக்க சிப்பி வளையல்கள் பல மௌரிய சாமராஜ்ஜிய அகழ்வாய்வுகளில் கிடைத்தன[2] செம்பு ஆணிகள் மற்றும் தங்க இழைகள் போன்ற வேறு சில அம்சங்கள் .[2]
வடிவமைப்பு
கைச்சங்கிலி போலல்லாமல் வளையல்கள் வட்ட வடிவில் அமைந்துள்ளது. வளையல் என்னும் பொருள தரும் ஆங்கில வார்த்தை (Bangle), பங்க்ரி (கண்ணாடி) என்ற இந்தி வார்த்தையிலிருந்து வந்துள்ளது. இவை பொருள் மதிப்புள்ள மற்றும் பொருள் மதிப்பற்ற தங்கம், வெள்ளி, பிளாட்டினம், கண்ணாடி, மரம், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களினால் செய்யப்பட்டதாகும். வெள்ளை நிற சங்கு வளையல்களை மணமான வங்கப் பெண்டிர் அணிவது மரபு.
வளையல்கள் ஒரு இந்திய மரபு அணிகலனாகும். அவற்றை பெண்கள் ஜோடிகளின் எண்ணிக்கைகளில் இரண்டு கைகளிலும் அணிவதுண்டு. பெண்கள் தங்கம் மற்றும் கண்ணாடி வளையல்களைக் கலந்து அணிய விரும்புகிறார்கள். கண்ணாடி வளையல்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் வளையல்களின் உபயோகம் அதிகரித்தாலும், திருமணம், விழாக்கள் போன்ற சடங்குகளில் கண்ணாடி வளையல்களே விரும்பபடுகின்றன. எளிமையான கைவினைக் கலைஞ்ர்களின் வேலைப்ப்படுமிக்க வளையல்கள் தொடங்கி வைரம், ஜாதிக்கற்கள் மற்றும் நலமுத்து பதிக்கப்பட்ட வளையல்கள் வரை பல தர வடிவமைப்புகள் உண்டு. தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களாலான வளையல்கள் கல கலவென்று ஒலி எழுப்பும். செயற்கை வளையல் ஆபரணங்கள் வேறுவித ஒலியினை எழுப்பும்.
வளையல் வகைகள்
அடிப்படையில் இரண்டு வகை வளையல்கள் உண்டு: ஒன்று திடமான உருளை வகை மற்றொன்று பிளவுபட்ட சுருள் வகை (split). வளையல்களை பூட்டுதல் திறத்தல் போன்ற வசதிகளுடன் தயாரிப்பது இன்னொரு வகை. வளையல்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிபடையில் வகைப்படுத்தப்படுவதும் உண்டு. உதாரணம்: கண்ணாடி முதல் பச்சை பாசிமணி வரை; மற்றும் அரிய உலோகம் முதல் அரக்கு வரை. விலை மதிப்பைக் கூட்டும் விஷயம் என்னவெனில் உலோகங்களில் செய்யப்படும் கைவினை வேலைப்பாடு ஆகும். இந்த வளையல் அலங்கார வேலைப்பாடு, கண்ணாடித் துண்டுகள் பதித்தல், மணிகளை இணைத்தல் என்பனவாகும் அரிய நிறம் கூட வளையல்களின் மதிப்பைக் கூட்டும். அரக்கு வளையல்கள் பழமையும் முறியும் தன்மையுமுடையது. அரக்கு என்பது ஒரு வகை மண் ஆகும். இவை சூளைகளின் உதவி கொண்டு வளையல்களாக வார்க்கப்படுகின்றன. ரப்பர் வளையல்கள் புதிய வரவாகும். பிளாஸ்டிக் வளர்ந்து வரும நவநாகரிகங்களுக்கு ஈடுகொடுக்க வல்லது. பொதுவாக மக்கள் வளையலை மணிக்கட்டில் அணியும் ஒ௦ரு வகை ஆபரணம் என்று கருதுகிறார்கள். எனினும் தென்னாசிய மற்றும் அரேபிய தீபகற்பங்களின் கலாச்சாரப்படி குறிப்பிட்ட வளையல்கள் குறிப்பிட்ட சடங்குகளில் சம்பிரதாயங்களில் அணிந்து கொள்ளும் ஆபாரணமாகும்.
உற்பத்தி

படத்தொகுப்பு
- தமிழகக் கிராம தள்ளுவண்டி வளையல்கடை
- கைக்காப்பு
- வளையற் கடை
- குழந்தைகளுக்கு காலில் அணிவிக்கப்படும் ஐம்பொன் காப்பு
குறிப்புகள்
மேற்கோள்கள்
- Ghosh, Amalananda (1990). An Encyclopaedia of Indian Archaeology. Brill. ISBN 90-04-09264-1.