கவுசவே குடா

கவுசவே குடா (Causeway Bay) என்பது ஹொங்கொங்கில் வளர்ச்சி மிக்க ஒரு பகுதியாகும். எண்ணற்ற உயர் கட்டடங்களையும், வானளாவிகள் பலவற்றையும் கொண்ட பகுதியாகும். இப்பகுதி ஹொங்கொங் தீவின் வடக்கு கடலோரம் வஞ்சாய் மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்டம் பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இந்த பகுதியின் நிலங்களின் குத்தகை விலை உலகில் அதிகமான விலைக்கொண்ட பகுதிகளான லண்டனில் உள்ள சுலோன் வீதி மற்றும் நியூ யோர்க் நகரில் உள்ள ஐந்தாம் ஒழுங்கை போன்ற இடங்களின் குத்தகை விலைக்கு சமமானதாகும்.

கவுசவே குடா நகரின் காட்சி

இந்த கவுசவே குடா எனும் பெயர், கவுசவே குடா நகரின் பெயராகவே உள்ளது. இந்த கவுசவே குடா நகர் பகுதி விக்டோரியா பூங்கா, ஹொங்கொங் அரச படகுக் கூடலகம் உட்பட பல சிறப்புமிக்க இடங்களை உள்ளடக்கியதாகும். மக்கள் இரவு பகல் வேறுப்பாடு இல்லாமல் 24 மணித்தியாளமும் சனநெருக்கம் காணப்படும் ஒரு பகுதியாகும். இப்பகுதிகளில் உள்ள உணவகங்கள், உல்லாச ஊடலங்கள், கூடலங்கல் இரவு பகலாக திறந்தே இருப்பவைகளாகும். இரவு நேரங்களில் பன்னாட்டு பாலியல் பணிப்பெண்களும் உலாவும் ஒரு பகுதியாகும். எண்ணற்ற உல்லாசகங்களும் இப்பகுதியில் உள்ளன. [1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.