கழுதை (விலங்கு)

கழுதை (Donkey) என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று.

கழுதை
வளர்ப்பு விலங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: ஒற்றைப்படைக் குளம்பிகள்
(பெரிசோடாக்டிலா, Perissodactyla)
குடும்பம்: குதிரைக் குடும்பம்
(Equidae)
பேரினம்: குதிரைப் பேரினம்
(Equus)
துணைப்பேரினம்: கழுதை துபே
(Asinus)
இனம்: ஆப்பிரிக்கக் கழுதை
துணையினம்: E. africanus asinus
மூவுறுப்புப் பெயர்
Equus africanus asinus
லின்னேயசு, 1758
கழுதை

கழுதை அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.

பண்புகள்

பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 102 முதல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் கழுதைகள் 91-இல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. கழுதைகள் மிதமான பாலைநிலங்களில் வாழவல்லவை. இவை குதிரைகளை விட குறைவான உணவே உட்கொள்கின்றன. அதிகமான உணவு கொடுக்கப்படும் கழுதைகள் 'லேமினிடிஸ்' என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றன. கழுதைகளால் மிக்க ஒலி ஏற்படுத்த முடியும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.