கழிவறை துடைத்தாள்

கழிவறை துடைத்தாள் (Toilet paper) மனிதர் மலம் அல்லது சிறுநீர் கழித்தபின் தங்களது சுகாதாரம் பேணுவதற்காக பயன்படுத்தும் ஓர் மெல்லிழைத் தாளினாலான துடைப்பானாகும். இடைவெளிகளில் கிழிக்கக்கூடியவாறு துளைகளிடப்பட்டு காகித அட்டை உருளையின் மீது ஒரே நீளமானப் பட்டையாக இது பொதுவாக விற்கப்படுகிறது. நீரில்லாத கழிவறையில் உள்ள ஓர் பிடிப்பானில் பொருத்தப்பட்டு வேண்டிய அளவில் எடுத்துக்கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நவீன துடைத்தாள்கள் மலக்குழியில் மக்கி அழியுமாறு தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தன்மையே பிற குளியலறை மற்றும் முகத்திற்கான மெல்லிழைத் தாள்களிலிருந்து துடைத்தாள்களை வேறுபடுத்துகிறது.

கழிவறை துடைத்தாள் சுருள்.
கழிவறை துடைத்தாளும் அதன் பிடிப்பானும்.

இத்தகையத் தாள்களைப் பயன்படுத்துவது குறித்து சீனாவில் ஆறாம் நூற்றாண்டிலேயே பதியப்பட்டுள்ளது. 14ஆம் நூற்றாண்டில் இவை பெரிய அளவில் தயாரிக்கப்பட்டன. நவீன துடைத்தாள்கள் 19ஆம் நூற்றாண்டிலிருந்து வழக்கத்திற்கு வந்தன. உருளை வடிவ பிடிப்பான்களுடன் கூடிய துடைத்தாள்களுக்கான காப்புரிமை 1883இல் கோரப்பட்டுள்ளது.

மேலும் அறிய

  • De Beaumont, Sally (2000), Encyclopedia of Ephemera, UK: Routledge, pp. 190–191, ISBN 0-415-92648-3 Unknown parameter |coauthors= ignored (help)
  • Knuth, Donald E. (October 1984), "The Toilet Paper Problem", The American Mathematical Monthly, 91 (8): 465–470, doi:10.2307/2322567, JSTOR 2322567

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.