மலம் கழித்தல்

சமிபாட்டுப் பாதையிலிருந்து மலத்தைக் குதத்தினூடாக வெளியேற்றல் மலம் கழித்தல் (defecation) ஆகும். பொதுவாக இது அன்றாடம் மனிதர் செய்யும் செயற்பாடுகளில் ஒன்று. உடல் நலத்தைப் பேணுவதில் அன்றாடம் மலத்தைக் கழித்தல் என்பது அவசியமானதாகும்.

குதப்பகுதியின் அமைப்பு

உயிரினங்கள் திட, திரவ, அரைத் திண்மநிலையில் உணவுப்பாதையிலிருந்து குதம் வழியாகக் கழிவுகளை வெளியேற்றும் உணவு செரிமானத்தின் கடைசி நிகழ்வே மலம் கழிப்பதாகும். மனிதர்கள் தினமும் சில முறைகளோ அல்லது வாரத்தில் சில முறைகளோ மலம் கழிக்கிறார்கள்[1]. பின்னியக்க தசைக் சுருக்கம் (peristalsis) எனப்படும் பெருங்குடல் சுவர்களின் தொடர் தசைக் சுருக்க அசைவுகளின் மூலம் உணவுப்பாதையிலிருந்து மலம் பின் பெருங்குடலுக்குத் (மலக்குடல்) தள்ளப்படுகிறது. செரிமானமாகாத உணவும் இவ்வழியாக வெளித்தள்ளப்படலாம். இது, செரிமானப் பண்பற்ற உணவு வெளியேற்றம் (egestion) எனப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "A description of Normal Bowel Movements" (30 September 2013). பார்த்த நாள் 29 November 2013.
  2. NIH. "Bowel Movement". Medline. http://www.nlm.nih.gov/Medlineplus/bowelmovement.html. பார்த்த நாள்: February 19, 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.