கழிவறை

மனிதன் மலம், சிறுநீர், மற்றும் கழிவுகளை அகற்றப் பயன்படும் நீர்க்குழாய் முதலிய தொகுதி கழிவறை, கழிப்பறை அல்லது கக்கூஸ் (Toilet) எனப்படும். தமிழில் கழிவறை நீர்க்குழாய் தொகுதி இருக்கும் அறையை குறிக்கவே பெரிதும் பயன்படுகின்றது. இந்தக் கட்டுரையில் நீர்க்குழாய் முதலிய தொகுதியையே கழிவறை சுட்டும்.

A contemporary Japanese squat toilet including toilet slippers.

கழிவறை வரலாறு

உடல் கழிவுகளான மலம், சிறுநீர் ஆகியவற்றை உடலிருந்து அகற்றுவது மனிதனின் அன்றாட தேவைகளில் ஒன்று. அனேக நாடுகளில் 1800 களுக்கு முன்னர் காட்டுப்புற அல்லது ஒதுக்குபுற இடங்களிலோ மனிதர் உடல் கழிவுகளை அகற்றினர். சில ஐரோப்பிய நாடுகளில் அறை தொட்டி (champer pot) பயன்படுத்தப்பட்டது.

1800 பின்னரே தற்கால கழிவறை (toilet) முறையும் அதை ஏதுவாக்கிய முறையும் (Sewage collection and disposal system) நடைமுறைக்கு வந்தது.

கழிவறையின் தேவை

கழிவுகளை அவதானமாக அகற்ற வேண்டிய தேவை 1850 பின்னர் தெளிவாக உணரப்பட்டது. கழிவுகள் நீர்நிலைகளை களங்கப்படுத்தினால், அவற்றின் மூலம் நோய்கிருமிகள் பரவுவது ஏதுவாகிற்று. கழிவுகளில் நோய்க்கிருமிகள் தங்கி மனிதருக்கு பரப்புவதை மருத்துவர்கள் எடுத்துகூறினர்.

கழிவு, நீர்நிலை, நோய்க்கிருமி, நோய் ஆகியவற்றின் தொடர்புகள் நிரூபிக்கப்பட்ட பின், கழிவுகளை குடிநீர் நிலைகளில் இருந்து பிரிப்பது தேவையாகிற்று.

கழிப்பறையின் வகைகள்

பொதுவாகக் காணப்படும் கழிப்பறைகள் 4 வகைப்படும். அவை பின்வருமாறு:[1]

  1. உலர் கழிப்பறை
  2. ஈரக் கழிப்பறை
  3. உரக் குழிக் கழிப்பறை
  4. சூமேசு (ECOSAN) கழிப்பறை

உலர் கழிப்பறை

  1. எளிய முறைக் குழிக் கழிப்பறை
  2. உள் கட்டுமானத்துடன் கூடிய குழிக் கழிப்பறை
  3. காற்றோட்டம் மேம்படுத்தப்பட்ட குழிக் கழிப்பறை
  4. பிளேர் கழிப்பறை
  5. சோபாக் கழிப்பறை

ஈரக் கழிப்பறை

  1. செப்டிக் டேங்க் கழிப்பறை (Septic Tank Toilet)
  2. உறிஞ்சு குழிக் கழிப்பறை (Leach pit Toilet)

கழிவறைத் தொழில்நுட்பம்

உள்வீட்டு கழிவறை

  • தமிழக வீடுகளின் கழிவறைத்தொட்டியை அமைக்கும் விதம் படத்தில் காட்டப்படுகிறது. இது 4அல்லது5 நபர் உள்ள குடும்பத்திற்கு போதுமானதாகும்.பெரும்பாலும், கட்டுக்கற்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இக்கட்டுமான முறையினை, இயற்கையியல் வல்லுனர் எதிர்க்கின்றனர். ஏனெனில், கழிவுகள் இயற்கை முறைப்படி அழியவேண்டுமேயொழிய, இப்படி தேக்கி வைப்பதால் சுற்றுப்புறம் பாதிக்கப்படுகிறது என்கின்றனர்.

தமிழ்ச் சூழலில் கழிவறை

தமிழர்கள் வாழ்விடங்கள் பெரும்பாலும் சூடான வெட்ட நிலை பிரதேசங்களாகவே உள்ளன. எனவே காடு கரையில் வெளியில் ஒதுங்குவது இயல்பாக இருந்தது. வெட்பநிலையில் கழிவு காய்ந்து மண்ணுடன் மண்ணாக விரைவில் கலந்து விடுவதால் இது மிகப்பெரிய சூழலியல் விசயமாக தமிழர் மண்ணில் இருந்திருக்கும் வாய்ப்புகளில்லை.தமிழர் வரலாற்றில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் கழிவறைகளை (வெறும் நான்குச் சுவர்கள் கொண்ட மறைவிடம்) சுத்தம் செய்வதற்கு சிலரைக் குடியேற்றம் செய்ததாக அறிகிறோம்."[2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. UNICEF - நவம்பர்2011- பள்ளி சுகாதாரம் மற்றும் உடல்நலக் கல்வி ஆசிரியர் கையேடு
  2. தலித் மாநாடு : கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்-புதியமாதவி

உசாத்துணைகள்

  • William S. Levine (ed). (2000). Control System Applications. Bruece G. Coury. Water Level Control for the Toilet Tank: A Historical Prospective. New York: CRC Press.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.