கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோயில்

கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோயில் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கல்வியங்காடு என்ற ஊரில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் ஆகும்.

வரலாறு

இவ் ஆலயம் மிக பழமை வாய்ந்த ஆலயம் ஆகும். இக்கோயிலில் தமிழ்நாடு சிதம்பர நடராஜர் சந்நிதியில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள நடராஜ முக்குறுணிப் பிள்ளையார் கோயிலில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்ரீ நடராஜ முக்குறுனிப்பிள்ளையார் மூல மூர்த்தியாக விளங்குகிறார்.

பரராஜசேகர மகாராசாவின் கட்டளைப்படி அமைக்கப்பட்ட ஆலயம் கற்கோவில் ஆக அமைந்து காணப்பட்டது பின்னர் சிவக்கொழுந்து ஓதுவார் காலப்பகுதியில் இக்கோவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மூலஸ்தானம், அர்த்தமண்டபம் என்பன கற்கோவில் ஆகவும் மகாமண்டபம், சுநவன மண்டபம், ஸ்தம்பமண்டபம், வசந்த மண்டபம், கோபுர வாசல் இவைகள் நிர்மாணிக்கப்பட்டு குடமுழுக்குச் செய்யப்பட்டது.

பூசைகள்

இவ் ஆலயத்தில் மாதம் இரு சதுர்த்தி, மகா சதுர்த்தி, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, பிள்ளையார் கதை, நடேசர் அபிஷேகம், கார்த்திகை தீபம், புதுவருடப் பிறப்பு, தைப்பொங்கல் மற்றும் மணவாளக்கோல நிகழ்வுகள் இடம்பெறும்.

படக் காட்சியகம்

கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோயில்
[[|center|border|250x250px|alt=|முக்குறுணிப் பிள்ளையார் கோவில் முகப்புத் தோற்றம் ]]
முக்குறுணிப் பிள்ளையார் கோவில் முகப்புத் தோற்றம்  
முக்குறுணிப் பிள்ளையார் கோயில், கல்வியங்காடு
முக்குறுணிப் பிள்ளையார் கோயில், கல்வியங்காடு  

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.