கலீசிய மொழி

கலீசிய மொழி என்பது எசுப்பானியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கலீசியாவில் பேசப்படுகிற ஒரு மொழி ஆகும். இம்மொழி ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ 3-4 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது போர்த்துகீசிய மொழியுடன் மிகவும் நெருங்கிய ஒரு மொழி இது எசுப்பானியாவின் ஐந்து ஆட்சி மொழிகளுள் ஒன்றாகும். இதற்கு மூன்று முக்கிய வட்டார வழக்குகள் உள்ளன. அவை:

௧. கீழ் கலீசியம்

௨. நாடு கலீசியம்

௩. மேல் கலீசியம் ஆகும்.

இம்மொழி இலத்தீன் எழுத்துகளையே பயன்படுத்துகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.