கலிகோ புல்

கலிகோ புல் (Kalikho Pul 1969 சூலை[1] - 2016 ஆகத்து 9) என்பவர் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார்.[2][3][4] இவர் அருணாச்சலப் பிரதேசம், அனாஜா மாவட்டத்தில் உள்ள வால்லா என்ற சிற்றூரில் பிறந்தவர்[1]. இவர் மனிதவியல் தொடர்பான துறையில் பட்டம் பெற்றவர். இவர் 1995இல் தீவிர அரசியலில் நுழைந்து அதே ஆண்டில் ஹயூலிங் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். முகுத்மித்தி அரசில் நிதித்துறை அமைச்சராக 2003 முதல் 2007வரை பொறுப்பு வகித்தார்.[5] தொடர்ந்து ஹயூலிங் தொகுதியில் அடுத்தடுத்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நிதி, நீதி, சுகாதாரம், மகளிர் குழந்தைகள் நலம், மீன்வளம் போன்ற துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.

கலிகோ புல்
8 ஆவது அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
2016 பெப்ரவரி 19  2016 சூலை 13
முன்னவர் நபம் துக்கி
தொகுதி ஹயூலிங் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 1969 சூலை
வால்லா, அன்ஜாவ் மாவட்டம், அருணாச்சலப் பிரதேசம்
இறப்பு 2016 ஆகத்து 9
தேசியம் இந்தியா
தொழில் அரசியல்வாதி

இந்நிலையில் இவர் தலைமையிலான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேர் காங்கிரசின் முதலமைச்சரான நபம் துகிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய நிலையில் அருணாச்சலப்பிரதேசத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பல குழப்பங்களுக்கு பிறகு குடியரசுத்தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு கலிகோ புல்லின் தலைமையில் பிரிந்த 21 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 11 பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், கலிகோ புல் அருணாச்சலப்பிரதேசத்தின் ஒன்பதாவது முதல்வராக பெப்ரவரி 19, 2016 அன்று பதவியேற்றார்.[6] இதற்கிடையில் ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து நபம் துகி வழக்கு தொடர்ந்தார். வழக்கில் உச்சநீதிமன்றம் துகி அரசை கலைக்கும் வகையில், கவர்னர் ராஜ்கோவா பிறப்பித்த உத்தரவுகளுக்கு தடை விதித்து, ஆட்சி கலைப்புக்கு முந்தைய 2015 திசம்பர், 15ல் இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தது இதனால் கலிகோபுல் பதவியில் இருப்பது சட்டவிரோதமானது.[7] இதன்பின் நபம் துக்கி முதலமைச்சராக பொறுப்பேற்றார். பதவியை இழந்து மன அழுத்த்தில் இருந்த கலிகோபுல் 2016 ஆகத்து 9 அன்று தற்கொலை செய்துகொண்டார்.[8]

மேற்கோள்கள்

முன்னர்
நபம் துக்கி
அருணாச்சலப் பிரதேச முதல்வர்கள் பட்டியல்
பிப்ரவரி 19, 2016 
பின்னர்
நபம் துக்கி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.