கலஷா மொழி

கலாஷா மொழி, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள சித்ரால் மாவட்டத்தின் தாமெல் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படும் ஒரு மொழியாகும். இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானிய மொழித் துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி தார்டிக் மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

கலஷா மொழி
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kls

கலாஷா மொழி பேசுவோர் எல்லோரும் தொடக்கத்தில் தமக்கென ஒரு சமயத்தைப் பின்பற்றி வந்தனர். பிற்காலத்தில் பலர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டனர் எனினும் சுமார் 3000 பேர் வரை இன்னமும் தங்கள் மரபுவழிச் சமயத்தையே பின்பற்றி வருகின்றனர்.

இம் மொழி தொடர்பில் நிபுணரான ரிச்சார்ட்டு ஸ்ட்ராண்ட் என்பவர், கலாஷா என்னும் பெயர் ஆப்கானிஸ்தானின், நூரிஸ்தான் மாகாணத்தில் கலாஷ் பள்ளத்தாக்கின் வடமேற்குப் பகுதியில் வாழும் நூரிஸ்தானி மக்களின் இனப் பெயரோடு தொடர்பு உடையது எனக் கருதுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன் தெற்குச் சித்ரால் பகுதிவரை பரவியிருந்த இந்த நூரிஸ்தானிகளிடம் இருந்தே இப் பெயரை கலாஷா மொழி பேசுவோர் பெற்றிருக்கலாம் என்பது இவர் கருத்து. எனினும், இந்திய-ஈரானிய மொழிப் பிரிவின் இன்னொரு குழுவைச் சார்ந்த நூரிஸ்தானி மொழியாகிய கலாஷா-அலாவுக்கும், இந்திய-ஆரிய மொழியாகிய கலாஷா-முன் மொழிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.