கலச மஹால்

கலச மஹால் (Khalsa Mahal) என்பது இந்தோ-சரசெனிக் கட்டிடப்பாணியில் பால் பென்பீல்டு என்ற ஆங்கில பொறியாளரால் வடிவமைக்கப்பட்டு 1801ம் [1] ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடம் ஆகும்.[2]18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கட்டிடத்தை ஆங்கிலேய அரசு 1859ம் ஆண்டு எடுத்துக்கொண்டது.[3][4]

1905ம் ஆண்டில் கலச மஹாலின் தோற்றம்

அமைவிடம்

இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் வால்டாக்ஸ் சாலை, சேப்பாக்கத்தில் அமைந்துள்ளது. 1960ம் ஆண்டு கட்டப்பட்ட அரசு அலுவலகங்கள் நிறைந்த எழிலகம் கட்டிடத்தின் பின் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அருகே சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சேப்பாக்கம் பறக்கும் மின்சார தொடர் வண்டி நிலையம் அமைந்துள்ளன.[5]

இந்திய-அரேபிய கட்டிடக்கலை

இந்திய-அரேபிய கட்டிடக்கலையின் துணைகொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் பல இந்தியாவில் உள்ளன. இவற்றில் சென்னை மாநகரில் மட்டும் 450க்கும் மேல் அமைந்துள்ளன. இவற்றில் 1798ல் கட்டப்பட்ட வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள கலச மஹாலும், மெரீனா வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஹுமாயுன் மஹாலும் முக்கியமானவையாகும்.[6]1768 முதல் 1855 வரை ஆற்காடு நவாப் ஹுமாயூன் மகாலில் வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[7]

நிலை

இக்கட்டிடம் ஜனவரி 16, 2012 அன்று அதிகாலை 12:50 மணிக்கு தீப்பற்றி எரிந்து சிதிலமானது. [8] இக்கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிக்காக சுண்ணாம்பு, கடுக்காய், சர்க்கரை என்ற திரவம் ஆகியவற்றை தண்ணீரில் 15 நாட்கள் சிமெண்ட் தொட்டியில் ஊறவைத்து தண்ணீர் வடிகட்டியபின் உபயோகிக்கப்படும். [9]

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.