கர்ராரா விளையாட்டரங்கம்

கர்ராரா விளையாட்டரங்கம் (Carrara Stadium, அல்லது வணிகமுறையில் மெட்ரிகான் விளையாட்டரங்கம்) ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட் கோஸ்ட் நகரின் புறநகர்ப்பகுதி கர்ராராவில் உள்ள ஓர் விளையாட்டரங்கமாகும்.

கர்ராரா விளையாட்டரங்கம்
மெட்ரிக்கான் விளையாட்டரங்கம்
இடம் நெராங்-பிராட்பீச் சாலை, கர்ராரா, குயின்ஸ்லாந்து
எழும்பச்செயல் ஆரம்பம் 1986
திறவு 1987 (புனரமைப்பு 2010 - 2011)
உரிமையாளர் கோல்ட்கோஸ்ட் நகராட்சி மன்றம்
ஆளுனர் கோல்ட்கோஸ்ட் நகராட்சி மன்றம்
தரை புற்தரை
முன்னாள் பெயர்(கள்) கர்ராரா ஓவல்
கோல்ட் கோஸ்ட் விளையாட்டரங்கம்
குத்தகை அணி(கள்) 2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்
அமரக்கூடிய பேர் 1987 முதல் 2010 வரை -18,000
2011 - இன்றுவரை - 25,000

1987ஆம் ஆண்டில் பிறிஸ்பேன் பியர்ஸ் கால்பந்து அணியினர் ஆத்திரேலிய கால்பந்து லீக் போட்டிகளில் நுழைவதற்கு முன்னர் வெகுவாக புனரமைக்கப்பட்டது. ஆனால், 1993ஆம் ஆண்டில் பிறிஸ்பேன் அணியினர் காபாவிற்கு இடம் மாறிய பின்னர், மற்ற விளையாட்டுக்களுக்கும் இங்கு இடமளிக்கப்படுகிறது. 2018 பொதுநலவாய விளையாட்டுக்களின் துவக்க மற்றும் இறுதி விழாக்கள் இங்கு நடைபெறவுள்ளன.

மேற்கோள்கள்

    வெளியிணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.