கரவை க. கந்தசாமி

கரவை க. கந்தசாமி (இறப்பு: திசம்பர் 31, 1994) ஈழத்து எழுத்தாளர், இடதுசாரி அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, பேச்சாளர். கரவைக் கிழார் என்ற புனைபெயரில் எழுதியவர்.

கரவைக் கிழார்
பிறப்புக. கந்தசாமி
யாழ்ப்பாணம், கரவெட்டி
இறப்புதிசம்பர் 31, 1994
தெகிவளை, இலங்கை
இறப்பிற்கான
காரணம்
சுட்டுப் படுகொலை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
வசந்தாதேவி

வாழ்க்கைக் குறிப்பு

கந்தசாமி யாழ்ப்பாணம், கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பனங்காமத்துத் தலைவனாகிய கயிலாய வன்னியன் பதினேழாம் நூற்றாண்டில் ஒல்லாந்தருக்குப் பணிய மறுத்துப் பன்னிரண்டாண்டுகள் திறை செலுத்தாமற் போராடி வீழ்ந்த கதையை நாடக நூலாக இவர் எழுதியுள்ளார். இந்நூல் தணியாத தாகம் என்ற பெயரில் 1968 ஆம் ஆண்டில் வெளிவந்தது,[1]

அரசியலில்

இடதுசாரி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கரவை கந்தசாமி 1960களில் இலங்கைப் பொதுவுடைமைக் கட்சி இரண்டாகப் பிரிந்தபோது நா. சண்முகதாசனுடன் பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். மலையகத்தில் செங்கொடி தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். 1971 இல் இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட போது, என். சண்முகதாசனுடன் இவரும் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார்.[2]

ஈழத் தமிழ்ப் போராளிக் குழுவான புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் துணைத் தலைவராக 1994 பொதுத்தேர்தலில் புளொட் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார்.

படுகொலை

கரவை கந்தசாமி 1994 டிசம்பர் 31 அன்று இரவு கொழும்பு, தெகிவளையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.

எழுதிய நூல்கள்

  • தணியாத தாகம் (வரலாற்றுக் கற்பனை நாடகம்)
  • சித்தம் அழகியார் (இலக்கியக் கட்டுரைகள்)
  • கரவை கிழார் கவிதைகள்

மேற்கோள்கள்

  1. சமூக மாற்றத்துக்கான அரங்கு, க.சிதம்பரநாதன்
  2. "பல்கலைக்கழக கல்வியை பெற முடியாதது கவலை". தினகரன் வாரமஞ்சரி. மூல முகவரியிலிருந்து 31 திசம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 31 திசம்பர் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.