கரந்தை ஜெயக்குமார்

கரந்தை ஜெயக்குமார் (பிறப்பு 15 அக்டோபர் 1964), தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி சகுந்தலா ஆவர்.

கரந்தை ஜெயக்குமார்

பணி

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

நூல்கள்

  • கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள் (கோ.பாண்டுரங்கன், வே. சரவணன் உடன் இணைந்து), கரந்தைத் தமிழ்ச் சங்கம், கரந்தை, தஞ்சாவூர், 2010
  • விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், பேரா.சேகர் பதிப்பகம், 1158, மேல வீதி, தஞ்சாவூர், 2010
  • கணித மேதை சீனிவாச இராமானுஜன், பேரா.சேகர் பதிப்பகம், 1158, மேல வீதி, தஞ்சாவூர், 2011
  • கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், பிரேமா நூலாலயம், 48ஏ, தமிழ் நகர் மூன்றாவது தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர், 2012
  • கரந்தை மாமனிதர்கள், பிரேமா நூலாலயம், 48ஏ, தமிழ் நகர் மூன்றாவது தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர், 2014
  • வித்தகர்கள், பிரேமா நூலாலயம், 48ஏ, தமிழ் நகர் மூன்றாவது தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர், 2015
  • உமாமகேசுவரம் (கரந்தை சரவணன் உடன் இணைந்து), கரந்தை லோகநாதன் நூலாலயம், கரந்தை, தஞ்சாவூர், 2016
  • இராமநாதம், பிரேமா நூலாலயம் (கரந்தை சரவணன் உடன் இணைந்து), 48ஏ, தமிழ் நகர் மூன்றாவது தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர், 2016
  • சித்தப்பா (தமிழறிஞர் சி.திருவேங்கடம் நினைவு மலர்), பிரேமா ஜெயக்குமார், 48அ, தமிழ் நகர் மூன்றாவது தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர், 2018

விருதுகள்

  • மண்ணின் சிறந்த படைப்பாளி, ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ், 6ஆவது ரோட்டரி புத்தகத் திருவிழா, தஞ்சாவூர்
  • இராதாகிருட்டிணன் விருது, கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், 2016
  • ஆசிரியர் திலகம் விருது, பன்னாட்டு லயன் சங்கங்களின் ஆசிரியர் தின விழா, 2017
  • இராசராசன் விருது, 2018 (ராஜராஜன் கல்வி அறிக்கட்டளை, தென்னமநாடு, தஞ்சாவூர் மாவட்டம்) [1]

தமிழ்ப்பொழில்

கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினராக இருந்து அவ்விதழில் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகள், சாதனைகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

மேற்கோள்கள்

  1. தென்னமநாட்டில் வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்து ராஜராஜன் விருது வழங்கினார், திருச்சி மெயில், தஞ்சாவூர் மாவட்ட செய்திகள், 9 மே 2018

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.