தமிழ்ப் பொழில் (இதழ்)

தமிழ்ப் பொழில் என்பது, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினால் தொடங்கப்பட்ட ஒரு மாத இதழ் ஆகும்.

நோக்கம்

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களை மக்களுக்கு அறிவித்து, அந்நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளல், தமிழரையும், தமிழ் மொழியையும் இழிவு செய்து வரலாற்றைத் திரித்து எழுதிவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நியாயத்தை நிலை நாட்டுதல், மேல்நாட்டு நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வருதல் போன்ற நோக்கங்களுக்காகவே இவ்விதழ் தொடங்கப்பட்டது.

வரலாறு

கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ் அறிஞர்களால் 1911 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாகவே, மாத இதழ் ஒன்றின் தேவை உணரப்பட்டது. இதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. அரசாங்கத்தின் அனுமதி பெறுவதற்கும் நிதி திரட்டுவதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1919 ஆம் ஆண்டில் இதழுக்குத் தமிழ்ப் பொழில் என்ற பெயரும் இடப்பட்டது. ஆனாலும், நிதித் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 1913ல் சங்கத்தின் முதல் தலைவர் உமாமகேசுவரனாரினால் தொடங்கப்பட்ட இம்முயற்சி தடைப்பட்டு வந்தது. 1925 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தமிழ்ப் பொழிலின் முதல் இதழ் வெளியானது. தமிழ்ப் பொழிலின் முதல் ஆசிரியர் கவிஞர் அரங்கவெங்கடாசலம் பிள்ளை ஆவார்.

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.