கமலா தாஸ்
கமலா தாஸ் (மலையாளம்: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.[1]
கமலா தாஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | கமலா சுரயா (பொதுவாக கமலா தாஸ்) மார்ச்சு 31, 1934 புன்னயூர்க்குளம், மலபார் மாவட்டம், மதராஸ் பிரெசிடென்சி, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | மே 31, 2009 75) பூனா, மகாராஷ்டிரா, இந்தியா | (அகவை
புனைப்பெயர் | மாதவிக்குட்டி |
தொழில் | கவிஞர், சிறுகதை எழுத்தாளர் |
நாடு | இந்தியர் |
இலக்கிய வகை | கவிதை, சிறுகதை |
கமலாதாஸ் 1934 இல், கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறந்தார். ஆங்கிலத்தில் மட்டும் கவிதைகள் எழுதியவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்' (1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, `என் கதா' (My Story) என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
ஆங்கிலக் கவிதைக்காக சாகித்திய அகாதமி விருதினை 1981இல் பெற்றார். 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாளச் சிறுகதைகளையும் எழுதி வந்தவர்.
அவர் ஒரு பழமைவாத ஹிந்து நாயர் (நலாபத்) அரச குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும், டிசம்பர் 11, 1999 இல் இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டு தனது பெயரை கமலா சுரையா என மாற்றிக் கொண்டார். மே 31 2009 இல், தனது 75 வது வயதில் புனே மருத்துவமனையில் இறந்தார்.
எழுதிய நூல்கள்
- 1964: பக்ஷியுடைய மரணம்,
- 1982: எண்டே கதே (சுயவரலாறு)
- 1987: பால்யகால ஸ்மரணகள் (குழந்தைக் கால நினைவுகள்)
- 1994 நிர்மாதளம் பூத்தகாலம்
மேற்கோள்கள்
- "பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ்". inioru.com. http://inioru.com/பிரபல-மலையாள-எழுத்தாளர்/. பார்த்த நாள்: 3 June 2019.