கபாடபுரம்

கபாடபுரம் என்பது பாண்டியர்களின் இடைச்சங்ககால தலைநகரம் என்று கருதப்படும் நகரமாகும்.

அகப்பொருள்

மூலக்கட்டுரை - சங்கம்-முச்சங்கம்[1]

இறையனார் அகப்பொருளில் பின்வரும் குறிப்புகள் படி கபாடபுரத்தில் சங்கம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.

குறிப்புஇடைச்சங்கம்
சங்கம் இருந்த இடம்கபாடபுரம்
சங்கம் நிலவிய ஆண்டுகள்3700 (37 பெருக்கல் 100)
சங்கத்தில் இருந்த புலவர்கள்அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை இத் தொடக்கத்தார்
புலவர்களின் எண்ணிக்கை3700
பாடிய புலவர்களின் எண்ணிக்கை59
பாடப்பட்ட நூல்கள்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாரை அகவல் இத்தொடக்கத்தன
சங்கம் பேணிய அரசர்கள்வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திரு மாறன் வரை
சங்கம் பேணிய அரசர்களின் எண்ணிக்கை59
கவியரங்கு ஏறிய புலவர் எண்ணிக்கை5
அவர்கள் பயன்படுத்திய இலக்கண நூல்அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம்

இராமாயணத்தில் கபாடபுரம்

சீதையை நோக்கி தென்திசையை தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்கிரீவன் பின்வருமாறு கூறுகிறான்.

"நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள் அந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள்!"

இராமாயணம், கிசுகிந்தாகாண்டம்(4.41.18)

[2]

மேற்கோள்கள்

  1. இறையனார் அகப்பொருளுரை
  2. தடோ ஹேமாயம் திவ்யம் முக்த மனி விபுசிடம்
    யுக்தம் கவாடம் பாண்டியானாம் கடா த்ரக்சுயத வானராம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.