கந்தையா கனகரத்தினம்

கந்தையா கனகரத்தினம் (Kandiah Kanagaratnam, 28 சூலை 1892 - அக்டோபர் 3, 1962)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்தவர்.

கந்தையா கனகரத்தினம்
K. Kanagaratnam

நா.உ.
வட்டுக்கோட்டை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947–1952
பின்வந்தவர் வி. வீரசிங்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 28, 1892(1892-07-28)
இறப்பு அக்டோபர் 3, 1962(1962-10-03) (அகவை 70)
அரசியல் கட்சி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
தொழில் அரச அதிகாரி
இனம் இலங்கைத் தமிழர்

ஆரம்ப வாழ்க்கை

கனகரத்தினம் இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டையில் கந்தையா. செல்லம்மா ஆகியோருக்கு 1892 சூலை 28 இல் (ஆடி 28) பிறந்தார்.[2][3]

அரசுப் பணி

கனகரத்தினம் 1911 இல் அரசு எழுத்தர் பணியில் இணைந்தார்.[2] 1925 இல் தலைமைக் கணக்காய்வுப் பரிசோதகரானார்.[2] பின்னர் இவர் பிரதிக் கணக்காய்வாளர் நாயகமாகவும், பின்னர் பதில் கணக்காய்வாளர் நாயகமாகவும் பணியாற்றினார்.[2]

அரசியலில்

கனகரத்தினம் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு 9,487 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 1948 செப்டம்பர் 3 இல் தமிழ்க் காங்கிரசு கட்சி டி. எஸ். சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்ததை அடுத்து கனகரத்தினம் கல்வி அமைச்சருக்கான நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]

1952 தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட கனகரத்தினம், இம்முறை சுயேட்சை வேட்பாளர் வி. வீரசிங்கத்திடம் 426 வாக்குகளால் தோற்றார்.[5]

மேற்கோள்கள்

  1. "Directory of Past Members: Kanagaratnam, Kandiah". இலங்கை நாடாளுமன்றம்.
  2. ச. ஆறுமுகம் (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 69–70. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
  3. "பெரியார் க. கனகரத்தினம்" (1982). பார்த்த நாள் 1 பெப்ரவரி 2016.
  4. "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.