கந்தியார்

கந்தியார் என்போர் சமண சமயத்தில் துறவு பூண்ட பெண்மணிகள்.

அந்தணர் மரபில் இளமையில் கணவனை இழந்த பெண்மணிகள் கைம்மைக் கோலம் பூண்டு வடமொழி தென்மொழிகளில் வல்லவராக விளங்கி, இறை வழிபாட்டிலும், இசை (பஜனை) பாடுவதிலும் ஈடுபாடு செலுத்தி வாழ்ந்து வருதல் உண்டு.அதுபோல வாழ்ந்த சமண மதப் பெண்மணிகள் கந்தியார் எனப்பட்டனர்.

சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகள் கந்தியாருள் ஒருவர்.

சீவக சிந்தாமணி நூலில் இடைச்செருகல் பாடல்களைக் 'கந்தியார் பாட்டு' எனக் குறிப்பிடுகின்றனர். இந்தக் கந்தியார் பாடல்களைப் 'புன்சொல்' எனக் குறிப்பிட்டு அவற்றைக் களைந்து பரிமேலழகர் உரை எழுதியதாக பரிபாடல் உரை சிறப்புப் பாயிரம் குறிப்பிடுகிறது. [1]

உதயண குமார காவியம் என்னும் நூல் செய்தவர் யார் எனத் தெரியவில்லை. இந்த நிலையில் இத்தகைய கந்தியார் ஒருவர் இந்த நூலைச் செய்திருக்கலாம் என மு. அருணாசலம் கருதுகிறார்.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. மிகைபடு பொருளை நணைபடு புன்சொலில்
    தந்திடை மடுத்த கந்திதன் பிழையும்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.