மு. ரா. கந்தசாமிக் கவிராயர்

மு. ரா. கந்தசாமிக் கவிராயர் (இ. 1948) அருந்தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். சைவ வேளாள சமூகத்தை சார்ந்தவராக அறியப்படுகிறார்.

வாழ்க்கை

இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் மூன்றாவது மகன் ஆவார். துறைசை ஆதீனம் நமச்சிவாயத்திடம் கல்வி பயின்றார். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் நட்பு கொண்டிருந்தார். சிறிது காலம் ஆசிரியராகவும், பின்னர் 1909 ல் மதுரையில் விவேக பாநு அச்சகம் தொடங்கி, "விவேக பாநு' என்ற பத்திரிகையையும் நடத்தியவர்.[1] ஆரணிய காண்டத்திற்கு 1903-இல் உரை இயற்றினார்.[2] இவர் திருவாவடுதுறை ஆதீனப் புலவர்களுள் ஒருவர்.[3]

இவரின் படைப்புகள்

  • திருப்பேரூர் திரிபந்தாதி
  • குமண சரித்திரம்
  • பவ நிவேத நாயகியம்மை பிள்ளைத்தமிழ்
  • கருமலையாண்டவர் துதி மஞ்சரி
  • அரிமழத் தலபுராணம்
  • வியாசர் திரட்டு (இரண்டு பாகம்)
  • தனி செய்யுள் சிந்தாமணி
  • ஸ்ரீமத் கம்பராமாயணம்: ஆரணியகாண்டம் மூலமும் உரையும்

வேளாளர் புராணம்

இவர் வேளாளர் புராணம் எழுதியவர் ஆவார். இதில் 29 படலங்களும், 1373 விருத்தங்களும் கொண்டது. இது முழுக்க உழவர்களின் பெருமையையும் வேளாண் அறிவையும் பறைசாற்றும் நூலாகும்.

உசாத்துணைகள்

  1. கவிராயர்கள்
  2. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=591
  3. அருந்தமிழ்ப் புலவோர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.