கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.

'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர்.

  • நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. [1]

கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.[2]

இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் [3] ஒளிபரப்புகின்றனர். பெரும்பாலும் சூலமங்கலம் சகோதரிகள் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் பாடிய கந்த சஷ்டி கவசம் பிரபலமாக உள்ளது. ஆபேரி, கல்யாணி, சுபபந்துவராளி, சிந்து பைரவி ஆகிய ராகங்களை உள்ளடக்கிய ராகமாலிகையாக பாடப்படுகிறது.

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
  2. குமுதம் ஜோதிடம்;28.03.2008; சென்னிமலையின் திகட்டாத தேனமுதன் கட்டுரை
  3. கந்த சஷ்டி கவசம் ஒளிபரப்பு நேரம், பார்த்த நாள், 08, ஏப்ரல், 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.