கண்டமங்கலம் குருசாமி அம்மையார் கோயில்

குருசாமி அம்மையார் கோயில் என்பது புதுச்சேரி மாநிலத்தின் கண்டமங்கலம் எனும் ஊரில் அமைந்துள்ள சித்தர் ஜீவசமாதி கோயிலாகும்.[1] இந்த கோயில் கண்டமங்கலத்தில் சமரச சுத்த சண்மார்க்க நிலையத்தில் அமைந்துள்ளது. இவர் 1890லிருந்து 1895 வரையான காலகட்டத்தில் இப்பகுதியில் வசித்திருக்காலம் என்று நம்புகின்றனர். இந்தியா சுகந்திரம் பெறுவதற்கு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் தமிழக மற்றும் பிரஞ்சு எல்லைகளுக்கு இடையே இவ்விடம் அமைந்தமையால், சமாதி கவனிப்பாரற்று போனது. தமிழகத்திலிருந்தோ, பாண்டிச்சேரியிலிருந்து வருகின்ற பக்தர்களை பிரெஞ்சு படையினர் அனுமதிக்க மறுத்தனர்.[1] நடராஜ சுவாமிகள் என்பர் அசிரிரி மூலம் அம்மையாரின் சமாதியை அறிந்து, அவரின் அருளால் பல்வேறு நபர்களிடமிருந்து பொருட்களைப் பெற்று கோயிலாக கட்டினார். அம்மையாரின் படத்தினையும் பக்தரிடமிருந்து பெற்று சிலை ஏற்படுத்தினார். கண்டமங்கலத்தில் இக்கோயில் அமையவும், அன்னதானம் செய்யவும் வழிவகை செய்தார். [2]


பிராத்தனை

குருசாமி அம்மையாரின் அபிசேகத்திற்கு மிளாகாய் அரைத்து தந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.[1]

தலவரலாறு

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் பிறந்த நடராஜ சுவாமிகள் என்பவர் இத்தலத்தினை அறிந்து பல்வேறு நபர்களின் துணையுடன் கோயிலாக மாற்றினார். [1]நடராஜ சுவாமிகள் பல்வேறு தலங்களுக்கு யாத்திரையாக சென்றார். அவ்வாறு செல்லும் போது புதுவையில் சித்தானந்த சுவாமி கோயிலில் ஒரு அசிரி கேட்டது. [1]அதனைத் தொடந்து அவர் பயணப்பட குருசாமி அம்மையாரின் சமாதிக்கு அந்த அசிரிர் வழிகாட்டியது. புதருக்குள் இருந்த சமாதியை அறிந்த நடராஜர் அம்மையாரின் சமாதியை உலகிற்கு காட்டினார். அப்போது பிரெஞ்சு பிரிட்டிஸ் படையினரின் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தினார். [1]நடராஜ சுவாமிகள், அம்மையார் படத்தினை மங்கலம்பேட்டியில் வாழ்ந்த பக்தரிடமிருப்பதை அறிந்து அவரைத் தேடிக் கண்டுபிடித்து புகைப்படத்தினைப் பெற்றார்.[1] அதைக் கொண்டு அம்மையாருக்கு திருவுருவச் சிலையையும் செய்தார். பல்வேறு செல்வந்தர்கள் முன்பு அம்மையாருக்கு அளித்த நிலங்களையும், சொத்துகளையும் மீட்டார். அம்மையாரின் சிலை, கோயில் உருவாக்கத்தோடு, சுத்த சன்மார்கத்தினை நிறுவி அன்னதானத்தினை மேற்கொண்டார். [1]நடராஜ சுவாமிகள் மறைந்த பிறகு சீதாராம் சுவாமிகள் இப்பொறுப்பினை ஏற்று நடத்திவந்தார். இப்போது இருவரின் சமாதிகளும் அம்மையாரின் சமாதிக்கு சற்று அருகில் உள்ளன.[1]

ஆதாரங்கள்

  1. "Gurusamy Ammaiyar Temple : Gurusamy Ammaiyar Gurusamy Ammaiyar Temple Details - Gurusamy Ammaiyar- Kandamangalam - Tamilnadu Temple - குருசாமி அம்மையார்".
  2. "குருசாமி அம்மையார், கண்டமங்கலம்".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.