கடலன்

கடலன் சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன்.
அரபிக்கடல் ஓரமாக இருந்த விளங்கில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு இவன் ஆண்டுவந்தான்.
இவன் சிறந்த வள்ளல்.
இவனது ஆட்சிக்காலத்தில் இவனது தலைநகர் விளங்கில் கண்ணைப் போல அழகுடன் திகழ்ந்தது. இவன் ஒரு போரில் தன்னை வேற்படையுடனும், யானைப்படையுடனும் தாக்கிய பகைவரை முறியடித்திருக்கிறான்.[1]

இவன் காலத்திலோ, இவனுக்குப் பின்னரோ சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை விளங்கில் நகரைச் சூறையாடியிருக்கிறான்.[2]

சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இவ்விளங்கில் நகருக்கு நேரவிருந்த துன்பத்தைக் காத்தான். விழுமம் கொன்றான் என்னும் தொடருக்கு இவ்வாறும் பொருள் கொள்ளலாம்.

அடிக்குறிப்பு

  1. கறுத்தோர் ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும் மாவண் கடலன் விளங்கில் அன்ன என் மை எழில் உண்கண் கலுழ ஐய சேறிரோ அகன்று செய் பொருட்கே – ஆலம்பேரி சாத்தனார் பாடல் அகம் 81
  2. முதிர்வார் இப்பி முத்த வார்மணல் கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும் விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற களங்கொள் யானைக் கடுமான் பொறைய – பொருந்தில் இளங்கீரனார் பாடல் புறம் 53
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.